கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 12 October 2012

ஜெபமும் வேதமும்

மோசே தன் கையை ஏறேடுத்திருக்கையில் இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையை தாழவிடுகையில் அமலேக்கு மேற்கொண்டான். ( யாத் 17 : 11 )

இன்று எங்கு பார்த்தாலும் யுத்த செய்திகளையே அதிகமாகக் கேள்விப்படுகின்றோம். இந்த யுத்தத்தின் அடிப்படை நோக்கம் என்ன? அழிந்து போகும் மண்ணும் அநித்தியமான உரிமைகளும்தானே. ஆனால் ஒரு விசுவாசியின் யுத்தமும், யுத்தமுறைமைகளும் இவ்வுல யுத்தங்களைவிட முற்றிலும் வேறான ஒன்றாகும். ஏனனில் முதலாவது நமது யுத்தத்தை நடத்துவது நாமல்ல;  சேனைகளின் கர்த்தர். உலக யுத்தங்களின் கிடைக்கும் வெற்றியோ அநித்தியமானது. மாறக்கூடியது. ஆனால் ஒரு விசுவாசியின் வெற்றியோ நித்தியமானது. நிரந்தரமானது.

அமிலேக்கியர் யுத்தத்திற்கு வந்தபோது, பட்டயத்தை கொடுத்து யோசுவாவை யுத்தத்திற்கு அனுப்பிவிட்டு, பதட்டமின்றி தேவனுடைய கோலுடன் மலையுச்சிக்கு ஏறிய மோசே, யுத்தத்தை நோக்காமல் தன் கைகளையுயர்த்தி, கண்களை ஏறேடுத்;து தேவனை நோக்கி பார்த்தார். மோசேயின் கைகள் உயர்ந்திருக்கும் போது இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையை தாழவிடுகையில் அமலேக்கு மேற்கொண்டான். இதனால் சூரியன் அஸ்தமிக்கும் வரை மோசேயின் கரங்கள் வானத்தை நோக்கியபடியே இருந்தது.

ஆவிக்குரிய யுத்தத்திலே எதிரியான மாம்சத்தையும், பிசாசையும் ஜெயிக்கவேண்டுமாயின் நமது கரங்கள் பரத்தை நோக்கி உயர்ந்திருத்தல் மிகவும் அவசியம். ஒரு விசுவாசிக்கு தேவையானது முழங்காலின் ஜெபம் ஒன்றே! ஜெபம் ஜீவியம் குறைவுபடும்போது நமது விசுவாசமும் தளர்ந்து விடும். விசுவாசியை! தினம்தோறும் அதிகாலையில் தேவனின் திவ்ய பிரசன்னத்தையே நாடி ஒட உன்னை அப்பியாசப்படுத்திக்கொள். பரிசுத்தாவியானவரின் பெலத்தினால் இடைக்கட்டப்படுவாயாயின், உலக மயக்கமும் மாம்ச இச்சையும் உன்னை எதுவும் செய்துவிட முடியாது.  சூரியன் அஸ்தமிக்கும் வரை அதாவது உனது வாழ்நாள் முடியும்வரை உன் இருதயம் எப்பொழும் தேவனை நோக்கி மேலே உயர்ந்திருக்கட்டும். முழங்காலின் பெலனை அறியாதவன் யுத்தத்தில் வெற்றி பெறவே முடியாது.

யுத்தத்திற்க்காக எம் கரங்களில் கொடுக்கப்பட்ட பட்டயக்கரு தேவனின் வேதவசனங்களே. இது ரோம போர்வீரனின் கையிலுள்ள இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கூர்மையானது. இப்பட்டயம் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கும் போது மாம்சம் பெலன் குறைந்து தோற்றுவிடும் என்பதில் சந்தேகமேமில்லை ஆகவே முழங்காலின் ஜெபத்திலும் வேதவனங்களிலும் உறுதியாக தரித்திருப்போமாக! ஜெயம் நமக்கே!

“பிதாவே, ஜெபத்திலும் உமது வசனத்திலும் என்றென்றும் நிலைத்து நின்று ஆவிக்குரிய வாழ்வில் வெற்றி பெற எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.” 

Wednesday 10 October 2012

முறுமுறுப்பு

ப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து என்னத்தை குடிப்போம் என்றார்கள்

மிகப்பெரிய வெற்றியைக் கண்டதும் ஆர்ப்பரித்து துதித்துப்பாடிய அதே ஜனங்கள் மூன்று நாட்;களுக்குள் ஒரு சிறு கசப்பைக் கண்டதும் முறுமுறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏத்தனை பரிதாபமான நிலைமை இது துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படலாமா? ஓரே ஊற்றிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்கக்கூடுமோ? இயேசு கிறிஸ்துவிற்கு விரோதமாக பரிசேயர் சதுசேயர் வேதபாரகர் மாத்திரமா முறுமுறுத்தார்கள்? அவரது உபதேசம் கடினமானது என்று ஜனங்களும் சிஷர்களுங்கூட அவருக்கெதிராக முறுமுறுத்ததை வாசிக்க காண்கிறோமே ( 6 : 60 )
எமது நாவு முறுமுறுப்பதற்கு காரணம் பலவீதமான பலவீனங்களே ஆகும் 
  1. தேவனில் நம்பிக்கை அற்ற நிலைமை
  2. சுயவிருப்பு
  3. தற்பெருமை
  4. விசுவாசத்தில் முதிர்ச்சியற்ற தன்மை
  5. சுயபரிதாபம்
இப்படி பல காரணங்களை கூறலாம். இவர்கள் முறுமுறுக்கிறவர்களும் முறையிடுகிறவர்களும் தங்கள் இச்சைகளின் படி நடக்கிறவர்களுமாய் இருக்கிறார்களே ( யூதா 16 ) என்று நம்மை பார்த்து கர்த்தர் கூறுவாராயின் நாம் என்ன பதிலை சொல்லக்கூடும்?

மோசேக்கும்கூட தண்ணீர் தாகம் வந்தது. அவரோ முறுமுறுப்பை விட்டு கர்த்தரை நோக்கி கூப்பிட்டார். கர்த்தர் அவர் சத்தத்தை கேட்டு ஒரு மரத்தைக் காண்பித்தார். ஆதை தண்ணீரில் போட்டபோது அது மதுரமான நீரானது, தாகமும் தீர்ந்தது.

தேவபிள்ளையே சிறு சிறு கசப்புக்களையும் தடைகளையும் பார்த்து விசுவாசத்தை கெடுத்தக்கொள்ளாதே! முறுமுறுத்து சாபத்தை தேடிக்கொள்ளாதே! துன் கண்களை ஏறேடுத்துக் கூப்பிடும் ஒவ்வொருவருக்கும் சிலுவையின் உதவிகள் கிடைக்கும் அது சாவை வென்ற மரம். முறுமுறுக்கும் உன் நாவை அடக்கிபோட்டு, அந்த மரத்ததை உன் தோழின் மேல் வை தூய ஆவியானவரின் முழுமையான ஆளுகைக்குள் உன்னை அர்ப்பணித்து விடு. இனிமேல் உன் நாவும் இருதயமும் துதியினால் நிறைந்திருக்கட்டும்

“ என் அருமை பிதாவே, சிறு சிறு காரியங்களுக்கெல்லாம் முறுமுறுத்த என்னை மன்னித்துää என் நாவை துதியினால் நிரப்பிவிடும்…….. ஆமென்.

Monday 1 October 2012

ஜெயமுள்ள வாழ்க்கை


நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, வேண்டிக்கொள்ளுகிறேன். - (எபேசியர் 3:17-19).

ஒரு முறை பிரசங்கியார் D.L.Moody அவர்கள் தன்னுடைய பிரசங்கத்தில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் காட்டி, அதனில் உள்ள காற்றை எப்படி எடுப்பது என்றுக் கேட்டார். ஓவ்வொருவரும் ஒரு பதிலைக் கூறினார்கள். “ஒருவர் சொன்னார், ஒரு குழாயை வைத்து அதை உறிஞ்சி எடுத்துவிடுங்கள் ” என்றுக் கூறினார். அப்படி எடுத்தால் அங்கு வெற்றிடம் (Vaccum) உருவாகும். அதினால் கண்ணாடி உடைந்து விடும் என்று மூடி கூறினார். இன்னும் அநேகர் வெவ்வேறு கருத்துக்களைச் சொன்னார்கள். அப்போது அவர் ஒரு பாத்திரத்திலிருந்து தண்ணீரை எடுத்து அந்த டம்ளரில் நிறைய ஊற்றி, “இப்போது இதில் கொஞ்சம்கூட காற்று இல்லை. தண்ணீரை ஊற்றியவுடன் காற்று எடுக்கப்பட்டு விட்டது” என்றார்.

அவர் இந்த சிறிய உதாரணத்தின் மூலம் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வது எப்படி என்றுக் காட்டினார். பாவத்தை அங்கும் இங்கும் உறிஞ்சி எடுப்பதால் அது போய் விடாது என்றும், நாம் பாவமில்லாத வாழ்க்கை வாழ்வதற்கு பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய இருதயம் நிரப்பப்பட வேண்டும் என்றும் விளக்கினார். பின்னும் அவர், ‘நம்முடைய இருதயத்திலிருந்து பெருமையும் சுயநலமும் மற்றும் பாவமான காரியங்களும்; விலகும்போது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய முழு இருதயத்தையும் நிரப்புவார்’, ஆனால் நம் இருதயம் அப்பாவங்களினால் நிறைந்திருந்தால் பரிசுத்த ஆவியானவருக்கு அங்கு இடமில்லை என்றுக் கூறினார். நம்முடைய இருதயம் உலக காரியங்களுக்கு வெறுமையாக்கப்படாலொழிய ஆவியானவர் அதை நிரப்ப முடியாது என்றும் கூறினார்.

அதுப் போல நாம் நம்மையே வெறுமையாக்கி ஆவியானவரை நம் இருதயத்திற்குள் அழைப்போம். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். அவர் வந்து நம் இருதயத்திற்குள் வாழும் போது எந்த பாவமும் நம்மை நெருங்காது. கர்த்தர் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களை செய்வார். மட்டுமல்ல சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார்; - யோவான் - 16:13.

ஒவ்வொரு நாளும் அவருடைய சித்தத்திற்கு நம்மை ஒப்புக்கொடுத்து நாம் வாழும்போது அவர் நம்முடைய வாழ்வை பொறுப்பெடுத்துக் கொள்வார்.

சிலர் பரிசுத்த ஆவியை அளவில்லாமல் நான் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு பிரசங்கிமாரிடம் போய் நிற்கிறார்கள். நீங்கள் உங்களை எவ்வளவு வெறுமையாக்குகிறீர்களோ அந்த அளவு அவர் உங்களை நிரப்புவார். எந்த பிரசங்கிமாரும் கடவுள் அல்ல உங்களுக்கு பரிசுத்த ஆவியை அதிகமாய் கொடுப்பதற்கும், மற்றவர்களுக்கு குறைவாக கொடுப்பதற்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...