கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 17 February 2014

பொறுப்பினைக் காத்து நடத்தல்

….என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்ப்படுத்தின படியினால், அவரை ஸ்தோத்தரிக்கிறேன் ( 1 தீமோ 1:12 )

கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையுள்ளவனாய் இருப்பது என்பது மிகவும் இலகுவான காரியமல்ல………………!! ஆனால்..பொறுப்புக்களை எடுப்பது, தலைமைத்துவத்தில் இருப்பது என்றால் சிலருக்கு அலாதிப் பிரியம் இவற்றிற்கெல்லாம் இப்போ நான்தான் பொறுப்பு,  இன்னின்ன காரியங்களுக்கு நான் தான் தலைவர் என்று சொல்லுவதிலே மகிழ்ச்சி காண்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொறுப்புக்களை எடுப்பதும், தலைவர்களாய் இருப்பதும் முக்கியமானதல்ல நாம் எடுத்த பொறுப்புக்களை எப்படியாய் செய்கிறோம் என்பதும், எமது தலைமைத்துவத்தை எப்படியாகக் கையாளுகிறோம் என்பதுமே முக்கியமானதாகும்.

ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை, தகப்பனார் போர்க்களத்தில் இருக்கும் சகோதரருக்கு உணவு எடுத்துச் செல்லும்படியாகக் கூறியபோது, அவன் அதிகாலமே எழுந்து தனது ஆடுகளை காவலாளிகள் வசம் ஒப்படைத்து, பின்னர் போர்க்களத்திற்குச் செல்வதைக் காண்கிறோம். (1சாமு- 17:20). தன் பொறுப்பில் இருப்பது ஆடுகளாயினும் அவற்றைத் தவிக்கவிட தாவீதுக்கு மனதிருக்கவில்லை. தாவீதின் பொறுப்பான தன்மை இதில் எமக்கு வெளிப்படுகிறதல்லவா? தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதினால் இப்போழுது அவனுக்கு துணிகரமும், அகங்காரமும் வந்துவிட்டதனால் ஆடுகளைக் கவனிக்காது விட்டுவிட்டு இங்கே யுத்தகளத்தில் வந்து நிற்கிறான். ஏன தப்பாகப் புரிந்து கொண்ட அவனது சகோதரன் எலியாப் கோபத்தோடு அவனைக் கண்டித்து கொள்வதையும் இங்கே நாம் கவனிக்கவேண்டும் (1சாமு- 17:28).

புதிய பொறுப்புக்கள் வந்ததும் பழைய பொறுப்புக்களை மறந்து போவது சர்வசாதாரணமாகிவிட்டது. புதவி மோகத்தால், குடும்பங்களை மறந்து போகும் தாய், தந்தையின் குடும்பநிலைகள் பரிதாபமானவைகள். ஏல்லாப்பொறுப்புக்களையும் தலைமேல் துக்கிவைத்துக்கொண்டு எதைச்செய்வது எனத்தெரியாமல் ஒன்றையும் செய்யாமல் இருப்பதைவிட அளவோடு பொறுப்புக்களை எடுத்து முழுமையாக செய்துமுடிப்பதே ஞானமான காரியம், ஒரு திருமண வைபவத்தில் ஆலயத்திற்கு வந்தவரை விருந்துபசாரத்தில் காணவில்லை என்று தேடியபோது அவர் வீடு சென்று படுக்கையில் இருக்கும் தனது தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து மீண்டும் பறப்பட்டு விருந்துபசாரத்திக்கு வந்திருந்தார். அவர் செய்த செயலை நாம் அறிந்து கொண்ட போது நாம் தேவனை மகிமைப்படுத்தினோம். பொறுப்பற்றிருப்போருக்கு இது சாவால் அல்லவா?.. நமக்கு அருளப்பட்டிருக்கும் பொறுப்புக்களை தேவன் தந்துள்ள பொக்கிஷங்களாக நினைத்து நாமும் செயல்படுவோமாக!.. சிந்திப்போம்…

ஜெபம் :-

“ஆண்டவரே.. எனது கைகளில் நீர் தந்திருக்கும் பொறுப்புக்களை உண்மைத்துவத்திடன் செய்ய உமது கிருபையை ஈந்தருளும்….ஆமென்.    

Related Posts Plugin for WordPress, Blogger...