கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 7 September 2012

அன்பின் நிமித்தம்

அவளுக்கு பிரதியுத்திரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை ( மத்தேயு 15 : 23 ) 

ஒருவர் கண்ட கனவு இது, அந்தக் கனவிலே ஜெபித்துக்கொண்டிருந்த மூன்று சகோதரிகளைக் கண்டாராம். இயேசு வந்து, முதலாவது சகோதரியிடம் தயவோடும், இரக்கத்தோடும், அன்பு நிறைந்த புன்சிரிப்போடும் இனிமையாக பேசிச்சென்றார். இரண்டாவது சகோதரியின் அருகிலே வந்ததும் குனிந்து ஜெபித்துக்கொண்டிருந்த அவள் தலையில் தன் கரங்களை வைத்து அன்போடு பார்த்துச்சென்றார். ஆனால் முன்றாம் சகோதரியின் அருகிலே வந்ததும் எதுவும் கூறாது அவளை அன்போடு கூட நோக்காது சென்று விட்டார். இந்த காட்சியை கவனித்துக்கொண்டிருந்த சகோதரி இயேசு முதல் சகோதரியை அதிகம் நேசிக்கின்றார். இரண்டாவது சகோதரியை அன்போடு பார்த்துச்சென்றார். ஆனால் இந்த முன்றாவது சகோதரியோ, இயேசுவை துக்கப்படுத்தியிருக்க வேண்டும். அதுதான் அவர் ஒரு வார்த்தையும் கூறாமல் அவளைப் பார்க்காது சென்று விட்டார். என்று தனக்குள் சிந்தித்தாள். ஆனால் இயேசுவோ அவளைப்பார்த்து “மகளே, நீ தவறாக எண்ணிவிட்டாய். முதலாவது பெண்ணுக்கோ ஒடுக்கமான என் பாதையில் நடந்து வர என் அன்பும் பரிவும் இரக்கங்களும் அதிகம் தேவை. இரண்டாவது சகோதரி என்னில் உறுதியான விசுவாசமும் ஆழமான அன்பும் கொண்டவள். ஆகையால், அவள் வாழ்க்கையில் வரும் சூழ்நிலைகள் பாதமாக மாறினாலும்ää அவள் எனக்குள் நிலைத்திருப்பாள். என்பதை அறிவேன். மூன்றாவது சகோதரியோ, என்னை மிகவும் நெருக்கமாக அறிந்தவள். தன் முழுநம்பிக்கையையும் என்னில் வைத்திருக்கிறாள். எந்தச் சூழ்நிலையிலும் அவள் என்னை நம்பி முறுமுறுப்பின்றி முன்செல்லுவாள் என்பதை நான் அறிவேன் என்றார்.

அன்பான நண்பர்களே நம்முடைய பிரச்சனைகளில், துன்பங்களில், துயரங்களில், வேதனைகளில், தேவன் மௌனமாக இருக்கிறார். என குறைவுபட்டுக்கொள்ளாதே. அவர் ஏற்றவேளையில் ஏற்ற காரியங்களை சரியாகவே செய்வார். என்று நம்பு. ஏனெனில் அவர் உன்மேல் வைத்திருக்கும் அன்பின் நிமித்தம் அமர்ந்திருக்கிறார். ஆகவே, தைரியமாக முன்செல்வாயாக!

Related Posts Plugin for WordPress, Blogger...