கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Saturday 8 September 2012

தாழ்மையின் செயற்பாடு

கர்த்தருக்கு முன்பாக தாழ்மைப்படுங்கள் அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார் ( யாக்கோபு 4 : 10 )
ஒரு வாலிப பாசறைக்கு விஷேச பேச்சாளராக ஒரு ஊழியர் அழைக்கப்படிருந்தார் மதிய உணவு முடிந்து கை கழுவுவதற்க்காக வரிசையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் மத்தியில் இவ் ஊழியரும் நின்று கொண்டிருந்தார். உணவு பருக்கைகள் அடைந்ததினால் கைகழுவும் தொட்டியில் நீர் உயர்ந்த வண்ணம் இருந்தது ஆனால் வாலிபர்கள் யாருமே அதனைப் பொருட்படுத்தவில்லை அந்த ஊழியரின் முறை வந்த போது அவர் கிழே குனிந்து ஒர் குச்சியை எடுத்து அத்தொட்டியின் துவாரத்தை சுத்தம் செய்தார். இந்த காரியம் ஒரு கணம் என்னை சிந்திக்க துண்டியது. அந்த பாசறையில் அதிக முக்கிய மான நபர் அந்த ஊழியர்தான் அவர் பிறர் நன்மைக்காக செய்த செயல் ஒர் தாழ்மையின் செய் அல்லவா? அரையிலே துணியைக் கட்டிக்கொண்டு தனது சிஷரின் கால்களை கழுவிய ஆண்டவரின் செயல் ஒரு தாழ்மையின் செயல் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட தாவீதுää போருக்கு சென்ற தனது சகோதரர்களுக்கு உணவு எடுத்துச் சென்றதும் ஓரு தாழ்மையின் செயற்பாடு. தாழ்மையாய் இருக்கவும் தாழ்மையான காரியங்களைச் செய்யவும்ää நாம் முன்வருவதுண்டா?

ஆண்டவரின் சமுகத்தில் நின்று பெருமை பேசுவோர் எத்தனை பேர். ஆண்டவரின் ஊழியத்துக்காகச் செய்யும் சிறிய காரியங்களைக் கூட பெருமையாக மார்பு தட்டிக்கொள்பவர்களும் எத்தனை பேர் பெருமை பேசியதால் தான் ஆண்டவரின் மகிமையில் இருந்த லூசிபர் என்னும் தூதன்அகால பாதாளத்தில் பிசாசானவனாக தள்ளப்பட்டான்.
Related Posts Plugin for WordPress, Blogger...