கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 17 September 2012

கர்த்தர் சொல்லுகிறார்.


நீ பயப்படும்போது – நான் உன்னைத் தைரியப்படுத்துவேன்.
(ஏசாயா 41:10,13. 44:2. மத்தேயு 14:27. அப் 18:9,10. சங்கிதம் 91:6. 138:6. ஆதி 15:1)

நீ களைப்படையும் போது – நான் உன்னை துக்கி சுமப்பேன்
(மத்தேயு 11:28. ஏசாயா 46:4. 40:11,29. 41:10. 49:15-16. உபாகமம் 1:31. யாத் 19:4. 6:6-7. சங்கிதம் 91:12 )

நீ சோர்வடையும் போது – நான் உனக்கு நம்பிக்கையளிப்பேன். 
(ஏசாயா 40:29,31. நீதி 3:25,26. 2கொரி 4:16. லூக் 18:1 சங்கிதம் 26:1 யோசு 1:9. எபி 12:2 புல 3:24 )

நீ கவலையாய் இருக்கும்போது நான் உன்னைத் தேற்றுவேன். 
(1பேதுரு 5:6. பிலிப்பியர் 4:6-7. ஏசாயா 66:13. 12:1 49:15 சங்கிதம் 71:21. மத்தேயு 6: 27-34:5,4)

நீ குழப்படையும்போது – நான் உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.              ( சங்கீதம் 32:8 119:24,73:24. வெளி 3:18. நீதி 16:3 யோசுவா 1:9)

நீ துயரப்பட்டு கண்ணீர் வடிக்கும் போது – நான் உன் கண்ணீரைத்துடைப்பேன். 
(வெளி 21:4 7:14 ஏரேமியா 31:16, 30:17, 38:5. ஏசாயா 25:8, யோவான் 16:20 )

வேதத்தில் பிரியம்

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்

ஒரு மனிதன் கவிதைப்புத்தகம் ஒன்றை வாங்கி அதைப் படிக்க ஆரம்பித்தான். அதன் முதல் பக்கத்தை மாத்திரம் வாசித்து விட்டு அது சுவையாக ரசனையாக இல்லை என ஓரமாக எறிந்துவிட்டான். சில மாதங்கள் கழித்து அவன் ஒரு பெண்ணை சந்தித்தான். அவளோடு பேசிப்பழகினான். அவளை நேசித்தான். இறுதியில் அவளை திருமணம் முடிக்க விரும்பினான். அப்பொழுது அவள் கவிதை எழுதுகிறவள் என்பதை அறிந்து கொண்டான். முன்பு சுவையும் ரசனையும் அற்ற கவிதை என்று துக்கி எறிந்த அந்த கவிதைகளை எழுதியது அவளே என்பதை அறிந்து உடனே அந்த கவிதைப் புத்தகத்தை தேடி எடுத்து அதை மீண்டும் வாசிக்க ஆரம்பித்தான். இப்பொழுது அதன் ஒவ்வொரு வரிகளும் அவனுக்கு தேனைப்போல இனித்தன ஒவ்வொரு கவிதைக்குள்ளும் பொதிந்திருந்த ஆழமான அர்த்தங்களை ரசித்துப்படிக்க ஆரம்பித்தான். புத்தகத்தை கிழே வைக்க மனமில்லாமல் இரவும் பகலும் பலமுறை அதை திரும்ப திரும்ப வாசிக்க ஆரம்பித்தான். எந்த புத்தகம் சுவையும் ரசனையற்றதாக இருந்ததோ அந்தப் புத்தகமே இப்பொழுது அவனுக்கு இன்மையான புத்தகமாக மாறியது. அதன் இரகசியம் அவன் அப்புத்தகத்தை அல்ல அதை எழுதியவரை நேசிக்க ஆரம்பித்ததுதான்.

அன்பான நண்பர்களே நாம் ஒரு உண்மையை புரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது நாம் கர்த்தரை முழுமனதோடு நேசித்தால் மாத்திரமே நம்மால் அவருடைய வார்த்தையையும் நேசிக்கமுடியும். நாம் கர்த்தரை உண்மையாய் நேசிக்காதவரை அவருடைய வார்த்தையையும் நேசிக்க முடியாது. இன்றைக்கு தினசரி பத்திரிகைகள் வார மஞ்சரிகைகள் கதைப்புத்தகங்கள் தொலைகாட்சி தொடர் நாடகங்கள் என பொழுது போக்கு சாதனங்கள் பெருகிவிட்டன. இவற்றின் மத்தியில் கர்த்தருடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதத்தில் பிரியமாயிருந்து அதை தியானிப்பது தேவனுடைய மக்களுக்கு மிகப்பெரிய சாவாலாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் அசுத்தமும் பாவமும் பெருகி வாழ்க்கையின் உண்மையான மதிப்பீடுகள் அழிந்து வருகின்றன. இந்த சமுதாயத்தில் நம்முடைய வாழ்க்கையும் நம்முடைய குடும்பத்தையும் கறைபடாமல் கர்த்தருக்குள் காத்துக்கொள்ள வேண்டுமானால் தெவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுக்கவும் அதன்படி வாழவும் நாம் தீர்மானிக்க வேண்டும். அப்படிப்பட்ட குடும்பங்களே உண்மையில் கர்த்தரின் பார்வையில் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பங்களாக காணப்படும்.


ஜெபம் :---- உம்முடைய வேதத்தில் நேசித்து அதைத் தியானித்து அதைக் கைக்கொண்டு வாழவும் இந்தப் பாவ உலகின் இழுப்புகளால் கறைபடாமல் என்னைக் காத்துக்கொள்ளவும் உமது கிருபையை தாரும். ஆமென். 

தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாயிருத்தல்

Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2012)


தேவன் பரிசுத்தர்; எனவே நாமும் பரிசுத்தராயிருக்கவேண்டும் என்று அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நாம் தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாயிருக்க வேண்டியது அவசியமே.

“யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?” (சங்.24:3). இதற்கான விடை “கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே” (சங்.24:4). நம்முடைய தாலந்துகளோ திறமைகளோ நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவராது. நம்முடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் இவை யாவும் தேவனுக்கு முன்பாக குற்றமற்றதாய் இருக்க வேண்டியது அவசியம். இவ்வுலகில் நாம் குற்றமற்றவர்களாய் வாழ்வது சாத்தியமா? அவ்வாறு வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற கேள்விகள் நமக்குள் எழுகிறதல்லவா? வேதாகமம் எழுப்பும் பல வினாக்களுக்கு நாம் அதிலேயே விடைகளைக் காணமுடியும்.

தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாய் வாழ ஐந்து வழிகளை நாம் கீழே காண்போம்.
1. கண்கள் காண்பதையெல்லாம் இச்சிக்க வேண்டாம்.


“மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான். ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருக்கும்போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள். அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள்” (2சாமு.11:1-5).

இப்பகுதி தாவீது செய்த மிகப்பெரிய பாவத்தை விளக்குகிறது. ஆம், தாவீதினுடைய வாழ்வில் கறைபடிந்த நிகழ்ச்சியாக இது அமைந்தது. இப்பாவத்தைச் செய்யும்படி தாவீதைத் தூண்டியது அவனது கண்களின் காட்சியேயாகும். ஒரு சிறந்த படைத் தளபதி, சிறந்த அரசர், போரைப்பற்றிய சிந்தனையில் உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது அவனது கண்கள் நீராடும் ஒரு ஸ்திரீயைக் கண்டது. ஒருவேளை இக் காட்சியில் தனது சிந்தனையைச் செலுத்தாதிருந்தால் இப்பாவத்தில் விழுந்திருக்கமாட்டார். இது தற்செயலாக நடந்த ஒரு சம்பவமாகும். நம்முடைய வாழ்விலும் நம்மை பாவத்தில் விழச்செய்யும் அநேக தற்செயலான நிகழ்வுகள் உண்டல்லவா? நாம் தங்கியிருக்கும் இடங்களிலும், பேருந்து நிறுத்தங்கள் இவைகளிலும் தொலைக்காட்சி சேனல்களின் காட்சிகளிலும் நாம் பலவேளைகளில் தடுமாறினது உண்டல்லவா? “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1). இதனைக் கூறிய பொழுது யோபு ஓர் இளைஞனாயிருக்கவில்லை. முதியவரான யோபு தன்னுடைய வாலிப காலத்துப் பாவங்களைப் பற்றியும் பேசவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எல்லா நிலைகளிலும் எல்லா வயதிலும் நம்மைப் படுகுழியில் வீழ்த்தும் பாவங்கள் பல உண்டு. எனவே நாம் அதிக எச்சரிப்புடன் நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

காரிருளில் நம் தீபம் இயேசு

காரிருளில் என் நேச தீபேம நடத்துமேன்,
வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்;
நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்;
ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன்

இந்த வரிகளை ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய பாடலின் முதற்கவி ஆகும். இந்த நான்கு வரிகளை மீண்டுமொருமுறை கருத்தாய் வாசியுங்கள். உன்னத கிறிஸ்தவ வாழ்விற்கான ஒரு அற்புத சத்தியம் இதில் அடங்கியுள்ளது. காரிருள்போல தோன்றும் வாழ்க்கையின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார்.

இன்றைய நாட்களில் விசுவாசிகள் அநேகர் தீர்க்கதரிசனமுள்ளவர் என யாரையாவது குறித்து கேள்விபட்டால் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலம் எப்படியிருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இது அநேக நேரங்களில் அஞ்ஞானிகள் குறி கேட்பது போல ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பாடலின் கருத்து நம் வாழ்க்கைக்கு மிகமிக அவசியாமானது. நாளைய தினத்தை கர்த்தர் பார்த்து கொள்வார் என்றும், இன்றைய தினத்திற்கான கிருபையை மட்டும் சார்ந்து வாழ நாம் கற்று கொள்வது அவசியம்.

நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அவருடைய கரத்தில் நமது காலங்களும் நமது வாழ்க்கையும் இருப்பதால், அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது என்ற நம்பிக்கை நமக்கு

ஞானத்தைப் பெறும் வழிமுறைகள் - Finding Godly wisdom.....

தேவனிடத்திலிருந்து வருகின்ற ஞானத்தைப் பெற்றுக்கொள்ள நாம் தேவனிடத்தில் முதலாவது ஜெபிக்க வேண்டும். இரண்டாவதாக ஞானத்தை தேட வேண்டும். இவைகளைக் குறித்து இனி கவனிப்போம்.

அ. ஞானத்தைப் பெற ஜெபித்தல்.
“உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” (யாக்கோபு 1:5)

நாம் ஜெபிக்கும்போது மாயக்காரரைப்போல தவறான உள்ளத்தோடும், தவறான நோக்கத்தோடு ஜெபிக்கக்கூடாது என்று கற்றுத்தந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, நாம் எப்படி ஜெபிக்கக்கூடாது என்பதைக்குறித்து கூறும்போது, 'அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள். அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்" (மத்தேயு 6:7) என்றார். இங்கே தேவனை அறியாத மக்கள்தான் அஞ்ஞானிகள். அதனால்தான் கடவுளை அறியாதவர்கள் போல ஜெபிக்கவேண்டாம் என ஆண்டவர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, இவ்வசனத்தில் ஜெபத்தில் அவர்களைப்போல வீண்வார்த்தைகளை (பொய்) அலப்பாதேயுங்கள் என்றும் கூறுகின்றார். வீண் வார்த்தைகள் என்றால் என்ன? இதை அர்த்தமில்லாத வார்த்தைகள் என்றும் கூறலாம். இந்த உலகத்தில் அர்த்தமில்லாத வார்த்தைகள் என்று ஏதாவது உண்டா? இல்லை வார்த்தை என்று சொன்னாலே அதற்கு ஏதோ ஒரு அர்த்தம் இருக்கத்தான் செய்யும். அர்த்தமில்லாதவை வார்த்தை என்ற அழைக்கமுடியாது. அப்படியானால் இங்கே அர்த்தமில்லாத வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள் என ஆண்டவர் எதனைக் குறிப்பிடுகிறார்? அர்த்தமுள்ள வார்த்தையை ஒருவர் அர்த்தமில்லாமல் உச்சரிப்பதுதான் அர்த்தமில்லாத ஜெபமாகும். இதுவும் ஞானமற்ற தன்மைக்கு ஒரு சிறந்த சான்றாகும். நாமோ ஞானத்தைத் தருகின்ற தேவனிடத்தில் தைரியத்தோடு அர்த்தத்தோடு ஜெபித்து ஞானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது நாம் அஞ்ஞானிகளாக திகழமாட்டோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...