கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 26 May 2014

தேவனை நோக்கி பார்

தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமானவர்

காய்ந்துபோன ஒரு மரக்கொப்பில் அமர்ந்திருந்த ஒரு குருவி, தனது இனிமையான குரலால் அழகாக தேவனை புகழ்ந்து பாட ஆரம்பித்ததாம். திடீரென மரக்கொப்பு முறியவே “ தொப்” என கிழே விழுந்த குருவி, மரத்திற்கு கிழே இருந்து தனது பாட்டை தொடர்ந்ததாம். மரத்திலிருந்து ஒரு பழம் குருவியின் தலைமேல் விழுந்ததாம். மரத்தைவிட்டு தத்தித்தத்தி புல்பூண்டு உள்ள இடத்திற்கு சென்று தனது பாட்டைத் தொடர்ந்த போது, பூண்டில் இருந்த ஒரு முள் குருவியின் காலை தைக்கவே “ஜயோ! தீமை பயக்கும் இவை எல்லாம் அழிந்துபோக வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு ஒரு கட்டிடத்தில் உச்சியிலே நின்றுகொண்டு பாடியதாம். தீடீர் என்று  கொட்டிய மழையில் நனைந்த குருவி, மரங்கள் புல் பூண்டுகளும் நனைந்து அழியப்போகிறது என்று எதிர்பார்த்ததாம். ஆனால் பரிதாபம்! பெய்த மழையினால் காய்ந்துபோயிருந்த மரமும், புல் பூண்டும் செழித்து வளர்ந்ததைக் கண்ட குருவி ஏமாற்றத்தால் மனம் புழுங்கியதாம். இக் கற்பனையிலும் ஒரு கருத்துண்டல்லவா! 

இந்தக் குருவியைப்வோலவே நாமும் மனம் புழுங்குவதுண்டல்லவா? தேவனை நாம் அண்டி வாழ்வதாலும், சத்தியத்திற்காய் துணிந்து நிற்பதாலும், பல உபத்திரவங்களை அனுபவிக்க நேரிடும். அந்தச் சந்தர்ப்பங்களில், தேவனை அறியாதோரும், சத்தியத்திற்குப் புறம்பாக நடப்பவர்களும் சுகபோக வாழ்வை அனுபவிப்பதையும், சத்தியத்தை மீறுவதால் செல்வச் செழிப்புடன் வாழ்வதையும் பார்க்கும் போது, இது எப்படி? நூம் உண்மையும் உத்தமமுமாய் வாழ்வது என்ன விருதாவா? ஏன்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா! ஆவர்களையெல்லாம் தேவன் பாராமல் கண்ணை முடிக்கொண்டு இருக்கிறராரோ? ஏன்றும் நாம் சொல்லுவதுண்டல்லவா? இதைதான் தாவீதும் தனது சங்கீத்தில் கூறுகின்றார். ஆரம்பத்திலே அவர் துன்மார்க்கரின் வாழ்வை பார்த்துப் பொறாமை கொண்டாலும், இறுதியில் அவர் உணர்ந்து சொல்லும் வார்த்தை என்ன? “தேவனே என் இருதயத்தின் கன்மலையும், என் பங்குமாயிருக்கிறார் (வச.26) “ எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்” என்கிறார் (வச.28)

துன்மார்க்கரின் வழியைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார். நூம் அவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளத் தேவையில்லை, நாம் தேவனை அண்டிக்கொண்டிருப்போம். எமது வாழ்வை சற்றே திரும்பி பார்ப்போமா! எமது மனநிலைகளை மாற்றிக்கொள்வோமா! எமது மன நிலைகளை மாற்றிக்கொள்வோமா! எமது வேதனைகளிலும், உபத்திரவங்களிலும் தேவனை நோக்கி பார்ப்போமா! “ கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” என்று சொல்லுவோமா!           

Related Posts Plugin for WordPress, Blogger...