கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 16 September 2012

கடவுள் இருக்கின்றாரா?

ஒருநாள் ஒரு மனிதன் தன் தலைமுடியை வெட்டுவதற்க்காகவும் தன் தாடியை சிரைப்பதற்க்காகவும் தன் வீட்டிற்க்கு அருகில் உள்ள பார்பர் சலுனுக்குச்சென்றார். அந்த பார்பர் வாடிக்கையாளருக்கு முடிவெட்டிக்கொண்டிருக்கும் போது இருவரும் பல தரப்பட்ட காரியங்களைக் குறித்து உரையாடத் தொடங்கினார்கள்.திடிர்ரென அவர்கள் கடவுளைக் குறித்து உரையாடத் தொடங்கினார்கள்.

பார்பர் கூறினான். கடவுள் இருக்கிறார் என்பதை நான் நம்புவதில்லை. ஏனனில் கடவுள் ஒருவர் இருந்தால் இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு வேதனையும் துன்பமும் கொடுமையும் காணப்பட வேண்டும்? எவ்வளவு பேர் பசி பட்டினி வியாதினால் கஷ்ப்படுகிறதை பாக்கிறோமை? கடவுள் என ஒருவர் இருந்தால் இவைகளை எல்லாம் அவர் ஏன் அனுமதிக்கவேண்டும். என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர். பதிலேதும் கூறவில்லை அவர் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை வாடிக்கையாளர் தான் வந்த வேலை முடிந்ததும் சலூனை விட்டு வெளியேறினார். அவர் அந்த பாதை வெளியே வீதியை கடக்கும் போது பாதை ஒரத்தில் நீண்டதாடியும் பல மாதங்களாக வெட்டப்படாமல் நீண்டு வளர்ந்த அழுக்கான தலை முடியம் கொண்ட ஒரு வயதான மனிதனைக் கண்டவுடன் அவர் மீண்டும் சலுனுக்குள் ஒடிச்சென்று பார்பரை நோக்கி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த உலகில் பார்பர் என்ற ஒருவரே இல்லவே இல்லை அப்படிப்பட்ட ஒருவர் இருந்தால் ஏன் நீண்ட தாடியும் வெட்டப்படாத அழுக்கான தலைமுடியும் பலர் தெருவோரங்களில் காணப்படவேண்டும். எனப் பதில் கேட்டார்.

தேவனை நம்பியிருக்கிறேன். நான் பயப்படேன்.

ஒவ்வொரு முறையும் ஒரு சொல்லை அழுத்தமாகக் கூறுங்கள்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.


ஒவ்வொரு முறையும் ஒரு சொல்லை அழுத்தமாகக் கூறுங்கள்.

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்

என் மேய்ப்பர் என் ஆத்துமாவைத் தேற்றுகிறார்




பலமுறை ஆழமாக மூச்சுவிட்ட பிறகு மறுபடியும் மேலேயுள்ள வாக்கியத்தை விசுவாசத்துடன் கூறிப் பாருங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பதை உணருவீர்கள்.....

சத்தியவசனம்......

சத்தியவசனத்தை கேட்டதினால்

விசுவாசிக்க தொடங்கினேன் - இயேசுவே

சத்தியமும் வார்த்தையும் என்பதை

விசுவாசிக்க தொடங்கினேன்.
சத்தியவசனத்தை வாசித்ததினால்

அறிவுக்கண்கள் திறந்தன - இயேசுவே

நித்திய தேவனும் ராஜாதிராஜனும்

என்பதை அறிந்தேன்.

சத்தியவசனத்தை பெற்றதினால்

பாவம் இன்னதென்பதை அறிந்தேன் - இயேசுவே

பாவியின் மீட்பரும் இரட்சகரும்

என்பதை அறிந்தேன்.
சத்தியவசனத்தை கேட்டதினால்

என்னில் ஜீவ ஒளி வந்தது - இயேசுவே

நித்திய ஜீவனைத் தந்தார்

சத்தியவாழ்வும் வந்தது.
சத்தியவசனத்தை கேளுங்கள்

அதன்படி வாழும்போதினில் - இயேசுவின்

அன்பும் பரிசுத்தமும் தங்கும்.

துன்பம் நீங்கிக் களிப்பு பெருகும்.


ஆக்கம் - ரி.எல்.தாசன்

கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்.

இக்கட்டுரையின் மூலம் றொபர்ட் பீட்டர்சன் அவர்களுடையது)

ஒருமுறை யுத்தமொன்றில் கிறிஸ்தவ ஊழியர் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டு சிறைச்சாலையொன்றில் அடைத்துவைக்கப்பட்டார். அங்கே அவர் பலவந்தமான முறையிலான சித்தத்தாக்குதலுக்கு (மூளைச்சலவை) அனுமதிக்கப்பட்டபோதிலும் அவர் அதற்கு இலக்காகிவிடவில்லை. (வேதவார்த்தைகள் நிரம்பிய ஒருவனுக்கு இலகுவில் ப்ரைன் வாஷ் செய்யமுடியாது) அவ்வேளையில் அவருடைய சிந்தைக்கு நங்கூரமாய் இருந்தது இந்த 23ம் சங்கீதமே. ஆழ்ந்த சோர்வோடு விரக்தியுற்றிருந்த அந்நிலையின் நடுவிலும் அவர் இச்சங்கீதத்தை உச்சரித்து, சரீரப்பிரகாரமாகவும் ஆத்மபிரகாரமாகவும் புதுத்தெம்பை அடைந்தார். இவரின் சிறுபிராயத்தில் இவரது தாயார் இச்சங்கீதத்தை இவருக்குக் கற்றுக்கொடுத்தது இவரது பாக்கியமே! இவ்விதம் பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகளை எமது தினசரி வாழ்க்கையில் பிரயோகிப்பதே நம் வாழ்வில் தேவ ஆவியானவர் செய்யும் கிரியையாகும்.

இன்று இருவகை கிறிஸ்தவர்கள் உள்ளனர். ஒருசிலர், இயேசுகிறிஸ்துவை தங்களின் மீட்பராக அறிந்துள்ள பொழுதிலும் தங்களின் பாரத்தை தாமே சுமக்கின்றனர். (இது உறவை அறுக்கின்றது. மனமுறிவில் முடிகின்றது). மற்றவர்களோ,இயேசுவை தங்களின் மீட்பராக அறிந்து இருப்பதோடு, அவரைத் தங்களின் வாழ்க்கைக்குரிய மேய்ப்பனாகவும் மீட்பராகவும் அறிந்துகொண்டுள்ளனர். இவ்வகை கிறிஸ்தவனே 23ம் சங்கீதத்தில் குறிப்பிடப்படுகிறான்.

வேதாகமமும் – அலைப்பேசியும்

செல்லிடைப்பேசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம், நமது வேதாகமத்துக்கு கொடுக்கிறோமா? இதோ சில ஆலோசனைகள்:

நாம் செல்லுமிடமெங்கும் அதை எமது கைப்பையில் அல்லது சட்டைப்பையில் எடுத்துச்சென்றால் என்ன?

ஒரு நாளில் அதிக தடவை அதை உபயோகித்தால் என்ன?

அது இன்றி வாழமுடியாது என்ற நிலையை ஏற்படுத்திக்கொண்டால் என்ன?

மற்றவர்களுக்கு அதைப் பரிசாகக்கொடுத்தால் என்ன?

பிரயாணம் பண்ணும்போது அதை பாவித்தால் என்ன?

ஆபத்தானதும் அவசரமுமமான நேரத்தில் எப்படிப் பாவிப்பதென்று கற்றுக் கொடுத்தால் என்ன?

எம் அயலவருக்கு அதை எப்படிப் பாவிப்பதென்று கற்றுக்கொடுத்தால் என்ன?

சரி, இன்னொரு விஷயம்,

செல்லிடைப்பேசியை பாவித்து, அதற்கு உரிய கட்டணத்தை செலுத்தாவிட்டால் தொடர்பு துண்டிக்கப்படும். ஆனால் வேதாகமத்தை அதிகமாக பாவிப்பதினால், நமக்கும் நமது ஆண்டவருக்கும் இடையே உள்ள உறவு அதிகரிக்கும்.

அது சரிதான், உங்களுடைய பரிசுத்த வேதாகமம்தான் எங்கே?

நன்றி: சத்திய வசனம்

கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன்

இந்த வாரத்தில் ஈரான் தேசத்தில், நீதிமன்றத்தில் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த வாலிப போதகர் யூசுப் நடர்கனி அவர்களுக்கு சென்ற வருடமே அவர் கிறிஸ்துவை ஏற்று கொண்டதால் மரண தண்டனை விதித்த ஈரானின் அரசு இப்போது இந்த வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனது உயிரே போனாலும் நான் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன் என்று கிறிஸ்துவை பற்றி கொண்டிருக்கிற அவருக்கு ஈரான் அரசு தயவு காட்டும்படியாக நாம் ஜெபிப்போமா?

ஈரான் தேசத்தில் இந்த யூசுப்பை போலவும், மற்றும் வெளியே தெரியாமல் இரகசிய கிறிஸ்தவர்களாக, அல்லது அரசாங்கத்தால் கிறிஸ்தவர்கள் என்னும் பேரினிமித்தம் பாடுபடும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் ஜெபங்களினால் கிறிஸ்துவுக்காக எழும்ப போகிற அநேக வாலிபர்களை என்ன செய்வது என்று ஈரான் அரசு திகைக்கும் காலம் கர்த்தரை மறுதலிக்கிற அந்த தேசத்தில் நிச்சயம் வரப்போகிறது. 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்' என்ற கர்த்தரின் வார்த்தைகள் அந்த தேசத்தில் நிறைவேறும்படியாக ஜெபிப்போம்.

Tks: அனுதின மன்னா

எதிர்காலத்திலும் வழிநடத்தும் கர்த்தர்.

ஒரு கணவர் தன் மனைவியிடம், 'ஐயோ இந்த காலத்தில் மற்ற பிள்ளைகள் படிக்கிறதையும் வாங்குகிற மார்க்குகளையும் பார்த்தால் நம்ம பிள்ளைகள் எங்கே போய் நிற்பார்களோ தெரியவில்லை! பிற்காலத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம் போலிருக்கிறது. ஒரு நல்ல வேலை கிடைக்காவிட்டால் இந்த பிள்ளைகள் என்ன செய்யும்?'என்று கவலைப்பட ஆரம்பித்தார். ஆனால் மனைவியோ, ' பாருங்கள் நம் பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்திருக்கிற அருமையான தாலந்துகளை! அவன் கிட்டாரை எடுத்து பாட ஆரம்பித்தால் எல்லாரும் நின்று கேட்டுவிட்டு தான் போவார்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? கர்த்தருடைய கரத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருப்பதால் அவர் பார்த்து கொள்வார்' என்று கூறினார்கள்.

இருவரும் கர்த்தரின் மேல் அன்புள்ளவர்கள்தான், அவர்மேல் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஆனால் கவலை என்று வரும்போது, கர்த்தரைவிட பிரச்சனைகளும் போராட்டங்களுமே பெரிதாக தெரிகிறது. நாம் கவலைப்படும்போது, நம்முடைய எண்ணங்களும், நம்முடைய சிந்தனைகளும் கர்த்தரை நோக்கி பார்ப்பதை விட்டுவிட்டு, பிரச்சனைகளையே நோக்கி பார்க்க ஆரம்பிக்கிறது. பேதுரு கடலின் மேல் நடந்து கர்த்தரை நோக்கி பார்த்தபடியே நடக்க ஆரம்பித்த போது வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்தார். ஆனால் எப்போது கடலையும் அலைகளையும் பார்க்க ஆரம்பித்தாரோ கடலில் மூழ்க ஆரம்பித்தார்.

'ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?'

ஃபென்னி க்ரொஸ்பி

8000 இற்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ள ஃபென்னி க்ரொஸ்பி (1820-1915) மருத்துவர் ஒருவரது தவறான பராமரிப்பினால் பிறந்த 6 கிழமைகளில் தன் கண் பார்வையை இழந்ததுடன், ஒரு வயது பூர்த்தியாகும் முன்பே தன் தகப்பனையும் இழந்தாள். தன் தாயுடனும் பாட்டியுடனும் வாழ்ந்த வந்த ஃபென்னி க்ரொஸ்பி சிறு வயதிலிருந்து நான்கு சுவிஷேசப் புத்தகங்களையும், பழைய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களின் பெரும்பாலான பகுதிகளையும் மனனம் செய்திருந்தாள்.

14 வது வயதில் நியூயோர்க் நகரிலுள்ள குருடர் பாடசாலையில் பயில தொடங்கிய ஃபென்னி க்ரொஸ்பி அங்கு 8 வருடங்களாக மாணவியாகவும் பின்னர் 15 வருடங்களாக ஆசிரியையாகவும் இருந்தாள். இவள் தனது 8 வது வயதில் எழுதிய கவிதை “என்னால் பார்க்க முடியாவிட்டாலும் நான் எவ்வளவு சந்தோஷமானவள்’ என்று ஆரம்பமாகியது.
ஒரு தடவை கிறிஸ்தவப் பிரசங்கி ஒருவர் ஃபென்னி க்ரொஸ்பியிடம் “தேவன் உனக்குப் பல வரங்களைக் கொடுத்திருந்தாலும் பார்வையைக் கொடுக்காமலிருப்பது உண்மையிலேயே வேதனைக்குரிய ஒரு விடயமே” என்றார்.

ஃபென்னி க்ரொஸ்பியோ உடனடியாக “ நான் பிறந்த உடன் தேவனிடம் ஒரு கோண்டுகோள் விடுக்கக்கூடியதாயிருந்தால், நான் பிறவிக் குருடியாகவே இருக்க விரும்புகிறேன் என்றே கேட்டிருப்பேன்’ என்றாள்.

ஃபென்னி க்ரொஸ்பியின் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்டு ”ஏன்?” என்று கேட்ட பிரசங்கியிடம் அவள் “நான் பரலோகத்திற்குச் செல்லும்போது என் இரட்சகர் இயேசுவைப் பார்ப்பதே என்னை முதலில் மகிழ்விக்கும் காட்சியாக இருக்கும்” என்று பதிலளித்தாள்.

குறைவுகளை நினைத்து கவலைப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எல்லா மனிதருக்கும் ஏதோ ஒரு குறைவு இருக்கின்றது. குறைவிலும் நாம் இயேசுவுக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே சிறந்தது. 95 வருடங்களாகக் கண்பார்வையற்றவளாக வாழ்ந்த ஃபென்னி க்ரொஸ்பிதே தேவனை மகிமைப்படுத்துவதற்கும் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கும் பாடல்களை எழுதுவதில் மனமகிழ்வுடன் ஈடுபட்டாள். சங்கீதக்காரனைப் போல, கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே அவளது பெலனாயிருந்தது (சங் 34.4) நாமும் எத்தகைய நிலையில் இருந்தாலும் எப்போதும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். (பிலி 4.11)
- (Job Anbalagan Thangasamy)

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

நீங்கள் பெறுமதிமிக்கவர்கள்

ஒரு நிகழ்வின்போது ஒரு அருமையான பிரசங்கியார் ஒருவர், பார்வையாளர்களை நோக்கி 1000 ரூபாய் தாளை உயர்த்திப் பிடித்துக்காட்டி, 'யாருக்கு இது வேண்டும்? எனக்கேட்டார். 

அந்த அறையிலிருந்த அனைவரும் தம் கரங்களை உயர்த்திக் காட்டினார்கள். உடனே பிரசங்கியார் 'இந்த 1000 ரூபாவை உங்களில் ஒருவருக்குக் கொடுக்கப் போகிறேன். அதற்குமுன் ஒரு காரியத்தைச் செய்யப் போகிறேன் என்று சொல்லி. அந்த 1000 ரூபாய் தாளை தன் கைகளினால் கசக்கிப் பிழிந்தார்.

பின் மீண்டும் பார்வையாளர்களை நோக்கி 'இது யாருக்கு வேண்டும்? எனக் கேட்டார். 
மறுபடியும் கைகள் உயர்ந்தன. உடனே அவர் அந்த 1000 ரூபாய் தாளை நிலத்தில் போட்டு,
தன் காலால் மிதித்தார். 

மீண்டும் பார்வையாளர்களை நோக்கி 'கால்களால் மிதிக்கப்பட்ட இந்த அழுக்கான தாள் யாருக்கு வேண்டும்? எனக் கேட்டார். 
மீண்டுமாக அனைவரும் தங்கள் கைகளை உயர்த்திக் காட்டினார்கள். 

உடனே அவர் அவர்களை நோக்கி 'பார்த்தீர்களா! இதிலிருந்து நாம் அருமையானதொரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். இந்த 1000 ரூபாய் தாளுக்கு நான் என்ன செய்தாலும் அதைக் குறித்து நீங்கள் பொருட்படுத்தவே இல்லை. அதனை நீங்கள் பெற்றுக்கொள்ளவே விரும்பினீர்கள். ஏனெனில் அது தனது பெறுமதியை இழந்து போகவேயில்லை. அதுபோலவே நமது வாழ்வும். பலவேளைகளில் சந்தர்ப்ப சூழ்நிலை களினாலும், நமது தவறான தீர்மானங்களினாலும், மற்றவர்களாலும் வீழ்த்தப்படுகிறோம். கசக்கப்படுகிறோம், காயப்படுகிறோம், மிதிக்கப்படுகிறோம், சேறு பூசப்படுகிறோம். அப்படிப்பட்ட நேரங்களில் நாம் நம்மைக் குறித்து பெறுமதியற்றவர்களாக எண்ணி உடைந்து விடுகின்றோம். ஆனால் நமது வாழ்வில் என்ன நிகழ்ந்திருந்தாலும், இனிமேல் என்ன நிகழ்ந்தாலும் நீங்கள் உங்கள் பெறுமதியை இழப்பதில்லை. நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மை படைத்த நம்முடைய ஆண்டவருக்கு நாம் பெறுமதி வாய்ந்தவர்கள். “

“நமது வாழ்வின் பெறுமதியானது, நாம் என்ன சாதித்திருக்கிறோம், நமக்கு என்னத் தெரியும் என்பதில் அல்ல, நம்மில் நாமே பெறுமதி உள்ளவர்களாய் இருக்கிறோம்" என்றார்.

சிந்தனைக்கு: 

உங்கள் பரம பிதாவுக்கு '..நீங்கள் விசேஷித்தவர்கள்" (மத்.6:26). 

'நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (ரோமர்.5:8).

ஒரு சிறிய விசுவாசம்....

ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.

அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள்.

வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

ஒரு ஏழை விதவையின் அற்ப விசுவாசம் ஜெபமாக வெளிவந்தது.

இந்த விதவையின் விசுவாசம் நமக்குண்டா?

ஒரு சிறிய தீ….. பெரிய காட்டை கொழுத்தி விடுகின்றது.

ஒரு சிறிய நாவு…. பெரிய விளைவை ஏற்படுத்தி விடுகின்றது.

ஒரு குளத்தில் வீசப்பட்ட ஒரு கல்…. பெரிய அலைவட்டத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

ஒரு சிறிய விதை….. ஒரு பெரிய விருட்சமாக மரமாக வளருகின்றது.

ஒரு சிறிய விசுவாசம்…. உண்டா?

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்.
Related Posts Plugin for WordPress, Blogger...