கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Thursday 26 December 2013

வேறு யாருக்காகவும் அல்ல....! உங்களுக்காக...

இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்று தேவ தூதன் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தான். 

அதில் என்ன சந்தோஷம் இருக்கிறது….. சிந்தியுங்கள்..

நாம் நினைத்தது நமக்கு நடந்து விட்டால் அது நமக்கு சந்தோஷமான செய்தி நாம் நினைத்த தலைவர் இலக்ஷனில் ஜெயித்து விட்டால் அது அந்த ஊருக்கு சந்தோஷமான செய்தி சிறப்பான தலைவர் நாட்டுக்கு அமைந்து விட்டால் முழு நாட்டுக்குமே அது சந்தோஷமான செய்தி ஆனால்! எல்லா ஜனத்திற்கும் சந்தோஷமான செய்தி எது என்று நினைக்கீர்கள்? ஆம் சந்தோஷமா செய்தி கர்த்தராகிய கிறிஸ்து உங்களுக்காக பிறந்ததுதான். அதில் என்ன சந்தொஷம் இருக்கிறது…என்று யோசிக்க வைக்கிறதல்லவா!......

முதலாவது…………….

பரிசுத்த வேதாகமத்திலே 1 திமோத்தேயு 6 : 16,17 ம் வசனங்கள் இப்படி கூறுகின்றன.. அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். என்று கூறுகின்றன. இந்த இறைவன்; மாம்சத்தில் வெளிப்பட்டார். என்று 1 திமோத்தேயு 3 : 16 கூறுகின்றது எதற்கு அவர் வெளிப்பட்டார் என்று ஆராய்கிற பொழுது கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். 
ஆம் அன்பானவர்களே.. அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஆகவே காணக்கூடாத இறைவன் நாம் காணும் படியாக வந்து மட்டுமல்லாமல் நாம் கண்டுபிடிக்க தக்க துரத்தில் இருக்கிறார். என்பது எவ்வளவு சந்தோஷமா செய்தி பாருங்கள்.

இரண்டாவது காரியம்……………..

நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார். என்று வேதாகமம் கூறுகின்றது. உண்மையிலே நாம் பிழைசெய்கின்றவர்கள். கடவுள் முன்நிற்க தகுதி அற்றவர்கள்.என்பது உண்மை இதை அறிந்த இறைவன் தம்முடைய சாயலில் படைக்கப்பட்ட எந்த பிள்ளையும் கெட்டுப்போகாமல் மனம் திரும்ப வேண்டும் என்பதற்காக தம் சொந்த குமாரன் மேல் நம் குற்றங்களை சுமத்தி நம்மை பாவம் இல்லாத புது மனிதனாக மாற்றி கடவுள் முன்னிலையில் பிழையில்லாத பிள்ளைகளாக நிலை நிறுத்துவதற்கு அவர் மனிதனாக வந்தார். இதை விட இந்த உலகில் மிகவும் சந்தோஷமான செய்தி உண்டா? 

அதுமட்டுமல்லாமல்!.........................

  • அவர் உங்களை அதிகமாக நேசிக்கிறார். ஆகவேதான் தன் உயிரையும் உங்களுக்காக தர பிறந்தார்.
  • அவர் உங்களோடு நடக்க  அவதரித்தார்.  
  • அவர் உங்களோடு பேச உறவாட அவதரித்தார்.  
  • அன்றய யூதர்கள் போல இன்று நீங்களும் உங்கள் இருதயத்தை கடினப்படுத்தி அவரை வரவேற்க்க ஆயத்தமில்லாதவர்களாய் இருக்க போகின்றீர்களா? அல்லது ஆட்டு மேய்ப்பர்கள் போல் அவரை சந்திக்க உங்களை ஆயத்தப்படுப்போகிறீர்களா?............. சிந்தியுங்கள்! 
இன்று ஆண்டவர் உங்களுக்கு அவரை தரிசிக்க அவரை சேவிக்க சந்தர்ப்பம் தருகிறார். அடுத்த வருடம் இதே சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது ஆண்டவருடைய கரங்களிலே தங்கி உள்ளது. ஆகவே கிடைக்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படு;த்திக்கொள்ளுங்கள். 

உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...