கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Thursday 4 April 2013

தேவன் நம் நிழலாயிருக்கிறார்


உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். ( சங்கீதம் 91 : 01 )

ஒரு நாள் காலையில் தாயும் மகனுமாக சந்தைக்கு போனார்கள். சந்தையில் தங்கள் அனுவல்கள் எல்லாம் முடித்து விட்டு திரும்பும் போது சந்தையின் அருகில் பெருங்கூட்டம் நிற்பதை கண்டு என்னவென்று பார்ப்பதற்காக கூட்டத்தினுள் நுாளைந்தனர்.

அப்பொழுது அங்கே மகுடியை வைத்துக்கொண்டு ஒரு மனிதர் ஊதிக்கொண்டிருந்தார். அவ் மகுடியின் சத்தத்திற்கு ஏற்ப அங்கே ஒரு பாம்பு தலையசைத்து ஆடிக்கொண்டிருந்தது. அவ் மனிதர் அவ் மகுடி ஊதுவதை நிறுத்தியதும் அப்பாம்பு சீறி அவர் மேல் பாய எத்தணிக்கும் அவர் சற்றும் பயமில்லாமல் அவ்பாம்மை அவ்மகுடியால் தட்டி விட்டு மீண்டும் ஊதுவார். சற்று நேரம் கழிந்த பின்னர். அங்கே நின்ற அச்சிறுவன் ”இப்பாம்பு சீறி உங்களை கொத்த பாக்குதே ஜயா உங்களுக்கு பயம் இல்லாயா? ” என்று கேட்டான். அதற்கு அவ் பாம்பாட்டி அச்சிறுவனிடம் இப்பாம்பு பல்லு பிடுங்கபட்டு விட்டது. நாம் இதை பார்த்து பயப்படத் தேவையில்லை. என்று கூறினான்.

அப்படித்தான் நம் வாழ்விலும் பிசாசு வந்து சிலவேளைகளில் பயமுறுத்திப் பார்க்கிறான். ஆனால் அவன் தலையை கிறிஸ்து இயேசு சிலுவையில் நசுக்கி விட்டார். அவன் தோற்றுப் போனவன். 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்' - யாக்கோபு. 5:8 என்றுப் பார்க்கிறோம். எந்த சிங்கமாவது விழுங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? சிங்கம் என்றால் கடித்துச் சாப்பிடுமே ஒழிய விழுங்காது. பிசாசானவன் விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான் ஏனென்றால்; அவன் பல் பிடுங்கப்பட்ட சிங்கம். அவன் தலையை நம் இயேசுகிறிஸ்து சிலுவையிலே நசுக்கிவிட்டார். அவன் கெர்ச்சித்து பயமுறுத்துவானே ஒழிய அவனால் ஒன்றும் செய்ய முடியாது.

அவன் உங்கள் வாழ்க்கையில் கெர்சிக்கிற சிங்கத்தைப் போல பயமுறுத்தலாம், ஆனால் அதைக் கண்டு பயந்து விடாதீர்கள். உங்கள் வேலை இடத்தில், உங்கள் அனுதின வாழ்க்கையில், அவன் பல தந்திர வேலைகளைச் செய்யலாம். ஆனால் பயப்படாதிருங்கள். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். நீங்கள் கர்த்தரை சார்ந்து ஜீவிப்பீர்களானால், உங்களுக்கு எதிராக கூட்டங் கூடினவர்கள் உங்கள் பட்சத்தில் வருவார்கள். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்?உங்கள் வேலையிடங்களில், உண்மையாய் வேலை செய்யுங்கள், கடினமாய் உழையுங்கள். உங்கள் அதிகாரிகள் பார்க்க வேண்டும் என்று வேலை செய்யாமல் கர்த்தர் பார்க்கிறார் என்று வேலை செய்யுங்கள். கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருப்பதைக் காண்பீர்கள். 

ஜெபம்: 

எங்களை நேசிக்கும் நல்ல தகப்பனே, சத்துரு எங்களை விழுங்க வகைத்தேடும்போது எங்களை உம்முடைய மறைவிடத்தில் வைத்து காப்பவரே உம்மை துதிக்கிறோம். நீர் எங்கள் பட்சத்தில் இருக்கும்போது எங்களுக்கு விரோதமாய் இருப்பவன் யார் ஆண்டவரே! உங்களை தொடுபவன் என் கண் மணியைத் தொடுகிறான் என்றுச் சொல்லி எங்களை உம்முடைய கண்ணின் மணிப்போல காப்பவரே உம்மைத் துதிக்கிறோம். எங்கள் துதிகளை உம்முடைய நாமத்திற்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


Related Posts Plugin for WordPress, Blogger...