கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 10 October 2012

முறுமுறுப்பு

ப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து என்னத்தை குடிப்போம் என்றார்கள்

மிகப்பெரிய வெற்றியைக் கண்டதும் ஆர்ப்பரித்து துதித்துப்பாடிய அதே ஜனங்கள் மூன்று நாட்;களுக்குள் ஒரு சிறு கசப்பைக் கண்டதும் முறுமுறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏத்தனை பரிதாபமான நிலைமை இது துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படலாமா? ஓரே ஊற்றிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்கக்கூடுமோ? இயேசு கிறிஸ்துவிற்கு விரோதமாக பரிசேயர் சதுசேயர் வேதபாரகர் மாத்திரமா முறுமுறுத்தார்கள்? அவரது உபதேசம் கடினமானது என்று ஜனங்களும் சிஷர்களுங்கூட அவருக்கெதிராக முறுமுறுத்ததை வாசிக்க காண்கிறோமே ( 6 : 60 )
எமது நாவு முறுமுறுப்பதற்கு காரணம் பலவீதமான பலவீனங்களே ஆகும் 
  1. தேவனில் நம்பிக்கை அற்ற நிலைமை
  2. சுயவிருப்பு
  3. தற்பெருமை
  4. விசுவாசத்தில் முதிர்ச்சியற்ற தன்மை
  5. சுயபரிதாபம்
இப்படி பல காரணங்களை கூறலாம். இவர்கள் முறுமுறுக்கிறவர்களும் முறையிடுகிறவர்களும் தங்கள் இச்சைகளின் படி நடக்கிறவர்களுமாய் இருக்கிறார்களே ( யூதா 16 ) என்று நம்மை பார்த்து கர்த்தர் கூறுவாராயின் நாம் என்ன பதிலை சொல்லக்கூடும்?

மோசேக்கும்கூட தண்ணீர் தாகம் வந்தது. அவரோ முறுமுறுப்பை விட்டு கர்த்தரை நோக்கி கூப்பிட்டார். கர்த்தர் அவர் சத்தத்தை கேட்டு ஒரு மரத்தைக் காண்பித்தார். ஆதை தண்ணீரில் போட்டபோது அது மதுரமான நீரானது, தாகமும் தீர்ந்தது.

தேவபிள்ளையே சிறு சிறு கசப்புக்களையும் தடைகளையும் பார்த்து விசுவாசத்தை கெடுத்தக்கொள்ளாதே! முறுமுறுத்து சாபத்தை தேடிக்கொள்ளாதே! துன் கண்களை ஏறேடுத்துக் கூப்பிடும் ஒவ்வொருவருக்கும் சிலுவையின் உதவிகள் கிடைக்கும் அது சாவை வென்ற மரம். முறுமுறுக்கும் உன் நாவை அடக்கிபோட்டு, அந்த மரத்ததை உன் தோழின் மேல் வை தூய ஆவியானவரின் முழுமையான ஆளுகைக்குள் உன்னை அர்ப்பணித்து விடு. இனிமேல் உன் நாவும் இருதயமும் துதியினால் நிறைந்திருக்கட்டும்

“ என் அருமை பிதாவே, சிறு சிறு காரியங்களுக்கெல்லாம் முறுமுறுத்த என்னை மன்னித்துää என் நாவை துதியினால் நிரப்பிவிடும்…….. ஆமென்.

Related Posts Plugin for WordPress, Blogger...