கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 12 October 2012

ஜெபமும் வேதமும்

மோசே தன் கையை ஏறேடுத்திருக்கையில் இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையை தாழவிடுகையில் அமலேக்கு மேற்கொண்டான். ( யாத் 17 : 11 )

இன்று எங்கு பார்த்தாலும் யுத்த செய்திகளையே அதிகமாகக் கேள்விப்படுகின்றோம். இந்த யுத்தத்தின் அடிப்படை நோக்கம் என்ன? அழிந்து போகும் மண்ணும் அநித்தியமான உரிமைகளும்தானே. ஆனால் ஒரு விசுவாசியின் யுத்தமும், யுத்தமுறைமைகளும் இவ்வுல யுத்தங்களைவிட முற்றிலும் வேறான ஒன்றாகும். ஏனனில் முதலாவது நமது யுத்தத்தை நடத்துவது நாமல்ல;  சேனைகளின் கர்த்தர். உலக யுத்தங்களின் கிடைக்கும் வெற்றியோ அநித்தியமானது. மாறக்கூடியது. ஆனால் ஒரு விசுவாசியின் வெற்றியோ நித்தியமானது. நிரந்தரமானது.

அமிலேக்கியர் யுத்தத்திற்கு வந்தபோது, பட்டயத்தை கொடுத்து யோசுவாவை யுத்தத்திற்கு அனுப்பிவிட்டு, பதட்டமின்றி தேவனுடைய கோலுடன் மலையுச்சிக்கு ஏறிய மோசே, யுத்தத்தை நோக்காமல் தன் கைகளையுயர்த்தி, கண்களை ஏறேடுத்;து தேவனை நோக்கி பார்த்தார். மோசேயின் கைகள் உயர்ந்திருக்கும் போது இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையை தாழவிடுகையில் அமலேக்கு மேற்கொண்டான். இதனால் சூரியன் அஸ்தமிக்கும் வரை மோசேயின் கரங்கள் வானத்தை நோக்கியபடியே இருந்தது.

ஆவிக்குரிய யுத்தத்திலே எதிரியான மாம்சத்தையும், பிசாசையும் ஜெயிக்கவேண்டுமாயின் நமது கரங்கள் பரத்தை நோக்கி உயர்ந்திருத்தல் மிகவும் அவசியம். ஒரு விசுவாசிக்கு தேவையானது முழங்காலின் ஜெபம் ஒன்றே! ஜெபம் ஜீவியம் குறைவுபடும்போது நமது விசுவாசமும் தளர்ந்து விடும். விசுவாசியை! தினம்தோறும் அதிகாலையில் தேவனின் திவ்ய பிரசன்னத்தையே நாடி ஒட உன்னை அப்பியாசப்படுத்திக்கொள். பரிசுத்தாவியானவரின் பெலத்தினால் இடைக்கட்டப்படுவாயாயின், உலக மயக்கமும் மாம்ச இச்சையும் உன்னை எதுவும் செய்துவிட முடியாது.  சூரியன் அஸ்தமிக்கும் வரை அதாவது உனது வாழ்நாள் முடியும்வரை உன் இருதயம் எப்பொழும் தேவனை நோக்கி மேலே உயர்ந்திருக்கட்டும். முழங்காலின் பெலனை அறியாதவன் யுத்தத்தில் வெற்றி பெறவே முடியாது.

யுத்தத்திற்க்காக எம் கரங்களில் கொடுக்கப்பட்ட பட்டயக்கரு தேவனின் வேதவசனங்களே. இது ரோம போர்வீரனின் கையிலுள்ள இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கூர்மையானது. இப்பட்டயம் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கும் போது மாம்சம் பெலன் குறைந்து தோற்றுவிடும் என்பதில் சந்தேகமேமில்லை ஆகவே முழங்காலின் ஜெபத்திலும் வேதவனங்களிலும் உறுதியாக தரித்திருப்போமாக! ஜெயம் நமக்கே!

“பிதாவே, ஜெபத்திலும் உமது வசனத்திலும் என்றென்றும் நிலைத்து நின்று ஆவிக்குரிய வாழ்வில் வெற்றி பெற எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.” 

Related Posts Plugin for WordPress, Blogger...