கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 6 August 2013

செயலிலும் இயேசுவை காட்டுதல்

...நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. - (1தீமோத்தேயு 4:12).

ஒரு கிறிஸ்தவ மனிதர் வழமையாக அன்றய நாளுக்கான சமயலுக்கு தேவையான பொருட்களை வேண்டுவதற்காக சந்தைக்கு சென்றார். ஆங்கு சென்ற போது தனக்கு தெரிந்த இன்னுமொரு கிறிஸ்த நண்பரை சந்திக்க நேர்ந்தது அப்பொழுது இருவரும் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இவ்வாறு கருத்துக்களை பரிமாறிக்கொண்டிருக்கும்போது கடவுளின் அன்பைக்குறித்தும் பேசினார்கள். அச்சந்தர்ப்பத்தில் திடிர் என ஒரு வாகன விபத்து நேரிட்டது. இதை கண்ட அவ் கிறிஸ்தவ நண்பர் ஒடிச்சென்று விபத்துக்குள்ளான மனிதர்களை வைத்தியசாலைக்கு ஏற்றும் வேலைகளில் மும்முரமாக இடுபட்டார். இதை அவதானிக்கொண்டிருந்த கிறிஸ்த மனிதர் அவ் கிறிஸ்தவ நண்பரை பார்த்து உமக்கு ஏன் இந்த தலை வலி என்று கேட்டார். அதற்கு அவ் கிறிஸ்தவ நண்பர் கிறிஸ்துவின் அன்பை பேச்சில் அல்ல செயலில் காட்ட வேண்டும் என கடிந்து கொண்டார். இதை கேட்டவுடன் அவ் கிறிஸ்தவ மனிதர் தன் பிழையை உணர்ந்து கொண்டார். 

அநேக கிறிஸ்தவர்கள் அவர்களை பேச சொன்னாலும். ஜெபிக்க சொன்னாலும் உலகமே அதிசயிக்கும் வண்ணம் பேசுவார்கள். ஜெபிப்பார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையை பார்க்கும்போது, அவர்கள் சொல்வதற்கும். ஜெபிப்பதற்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது.
.
கிறிஸ்துவை நாம் பிரதிபலிக்காதவரை நாம் மற்றவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றி சொல்கிற காரியங்கள் எல்லாம் வீணாகவே இருக்கும். மற்றவர்கள் 'எப்படி பேசினான் பார், ஆனால் மற்றவர்களை மன்னிக்க முடியவில்லை, மற்றவர்களுக்கு சிறிய உதவிக்கூட செய்ய முடியவில்லை' என்று பேசுவார்கள்.
.
'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத்தேயு 5:16) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆனால் அநேகர் நமககுள் இருக்கிற கிறிஸ்துவாகிய ஒளியை காண்பிப்பதற்கு பதிலாக நம்மையே அல்லது நம்முடைய ஜென்ம சுபாவத்தையே காண்பித்து கொண்டிருக்கிறோம்.
.
'ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவை ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின' என்று வேதம் கூறுகிறது. ஆனாலும் நாம் நம்முடைய பழைய சுபாவங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் கிறிஸ்து நமக்குள் இல்லை என்பதே அர்த்தமாகும்.
.
கிறிஸ்தவர் ஒவ்வொருவருமே மற்றவர்கள் வாசிக்கும் வேதம் என்று கூறுவார்கள். நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே மற்றவர்கள் இவர்கள் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை உடையவர்கள் என்று தீர்மானிப்பார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...