கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 29 August 2012

நன்மைக்கே!

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில் ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன் கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது வரிசையின் இடையே வந்து புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி "ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கூறுகிறதே. "பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!" எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

தன்னம்பிக்கை


ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார். அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது இ என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன  நினைக்கிறாய் என எனக்கு தெரியும். உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். 

சிறுவன் சொன்னான். ‘இல்லை, நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.

அன்பானவர்களே! நாம் இந்த கதையிலிருந்து ஒரு உண்மையை கற்றுக்கொள்ள வேண்டும் நாம் பிறருக்கு பிரதி உபகாரம் பாராமல் உதவி செய்ய வேண்டும் அதை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கின்றார். எனனில் அவரும் உலகில் இருந்த நாட்களில் அதை கடைபிடித்து தான் வாழ்ந்தார் வேதாகமம் இப்படியாக ஒரு வசனம் கூறுகின்றது உன் கையின் பிரயாசத்தை தண்ணீரின் ஆழத்திலே போடு அனே நாட்களுக்கு பிறகு அதன் பலனைக்காண்பாய் என்று எனவே பலனை எதிர்பார்த்து உதவிகளை செய்யாமல் கடவுள் நிச்சயமாக நாம் செய்யும் உதவிகளுக்கு பலன் தருவார் என்ற நம்பிக்கையோடு செய்யுங்கள் தேவன் நிச்சயமாக அவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். 

Related Posts Plugin for WordPress, Blogger...