கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 19 September 2012

உற்சாகமாய்க் கொடுக்கிறவரிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்


ஒய்வுநாள் பாடசாலை ஒன்றில் அதன் ஆசிரியர் பிள்ளைகளிடம் ஒரு கேள்வி கேட்டார். உங்களிடம் ஒரு கோடி ஓரு ரூபாய் இருந்தால் அதை இயேசுவிற்;கு கொடுப்பீர்களா? எல்லோரும் ஆம் என்று சத்தம் இட்டார்கள்.

ஜந்நூறு ரூபாய் இருந்தால் அதன் ஒரு பகுதியை கொடுப்பீர்களா?.. “ஆம் ரீச்சர்”
ஜம்பது ரூபாய் இருந்தால் அதன் ஒரு பகுதியை கொடுப்பீர்களா?.. “ஆம் ரீச்சர் கொடுப்போம்”
ஒரு ரூபாய் இருந்தால் அதன் ஒரு பகுதியை கொடுப்பீர்களா?.. “எவருமே எதுவுமே சொல்லவில்லை”. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

அப்போது கடைசி வரியில் இருந்த ரஞ்சன் மாத்திரம் எழுந்து நின்று “ஆம்” என்று கூறினான். ஆனால் அவனிடம் ஒரு ரூபாய் இருக்கவில்லை நான் கொடுப்பேன் என்று கூறி முன்வந்த ரஞ்சன் கையில் இருபத்தைந்து சதமே இருந்தது. அவன் தன்னிடமிருந்ததை இயேசு சுவாமியின் ஊழியத்திற்க்காக கொடுக்க முன் வந்தான். 

மற்றவர்கள் எல்லோரும் கோடி ரூபாய் கொடுப்பேன் என்றார்கள். எனென்றால் அவர்களிடம் அது இருக்கவில்லை ஆனால் அவர்களில் அனேகர் தங்களிடம் இருக்கும் சிறு பணத்தை கொடுக்க முன்வரவில்லை…
நம்மிடம் ஒரு கோடி இருந்தால் அதை இயேசுவுக்கு கொடுப்போம் என்று சொல்வது இலகு ஆனால் எம்மிடம் உள்ள சிறுதொகை பணத்தை என்ன? செய்கின்றோம்.

ஆம் நாம் இயேசு சுவாமியை எவ்வளவாய் நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே நாம் அவருக்கு காணிக்கை கொடுக்கிறோம். அல்லது அவருடைய நாமத்தில் இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். ஆகவே நாம் கொடுப்பது வெறும் பணமாக மாத்திரம் இருக்க வேண்டியதில்லை

உற்சாகமாய் கொடுக்கிறவர்கள் என்று வேதம் சொல்லுகிறது அல்லவா? அவர்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதனால் கொடுக்காமல் தேவன் மீதுள்ள அன்பின் நிமித்தமாக கொடுப்பவர்கள். இயேசு சுவாமிக்கென்று அவருடைய நாமத்தினாலே நீங்கள் கொடுப்பதுண்டா? ஆம் இயேசு நமக்காக தன்னேயே கொடுத்தாரல்லவா?.. முதலில் நாம் நம்மையே அவருக்குக் கொடுப்போம். பிறகு நம்முடையதையும் அவருக்கு கொடுப்போம் நம்மிடம் இருப்பதிலிருந்து காணிக்கை கொடுத்து இயேசுவின் நாமத்தின் நிமித்தம் ஊழியர்களுக்கு நம்மை செய்ய முயற்சிப்போமாக..



மனநோக்கு

..வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி நமக்கு பேர் உண்டாக்கப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்…(ஆதியாகமம் 11 : 4 )

உலகின் அதி உயர்ந்த கட்டிடமாக, கனடாவின் ரொறொன்ரோ நகரில் 1976ம் ஆண்டு ஜீன் மாதம் 26ம் திகதி கோபுரம் ஒன்று மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டுää 1995ல் அமெரிக்க வல்லுனர்களினால் இன்றைய உலகின் மிகச் சிறந்த அதிசயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் உயரம் 447மீற்றர் அல்லது 1465 அடி. மக்கள் சென்றடயக்கூடிய அதி உயரத்திலிருந்து ஏறத்தாழ 160 கிலோமீற்றர் தொலைதுரத்திற்க்கு பூமியின் விஸ்தாரத்தைப் பார்க்கலாம். மக்கள் போகக்கூடிய அதிஉயரமான இடத்திற்க்கு ஏறி கால் வைக்கும் போது ஒரு வாசகம் எழுதப்பட்டுள்ளது உங்கள் தலைக்கு மேல் ஆகாயம் மாத்திரமே அதாவது அந்த இடத்தில் நிற்கும் போது முழு பூமியும் அதன் சகலமும் நமது கால்களுக்கு கீழே என்றுதானே அர்த்தப்படும் இல்லையா? இன்று இந்தக் கோபுரத்தின் 50வீத உயரத்தையும் தாண்டி அதி அதி உயரமான கோபுரம் ஒன்று டூபாய் தேசத்திலே கட்டப்படுகிது. என்ற செய்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பறவையைக்கண்டு விமானம் படைத்த மீன்களைக் கண்டு கப்பலைப்படைத்து எதிரோலி கேட்டு வானோலி படைத்து என்று மனிதன் படைத்த சாதனைகளையெல்லாம் நாம் அறிவோம். ஆனால் மனிதன் எதனைக் கண்டு அதிசயங்களைப் படைக்கிறான்? இயற்கையைப் பார்த்து அவன் படைத்துள்ள படைப்புக்களே அவன் வாழ்விற்க்கு மிக உதவியாயுள்ளன. ஆனால் தன்னுடைய அறிவினால் ஆற்றலினால் படைத்துள்ள இன்றய நவீனங்கள் மனிதனுக்கு எதனைத் தேடிக்கொடுக்கிறது? அங்கேயும் தேவன் அருளிய அறிவுதான் பங்கெடுத்துள்ளது என்பதை அவன் எவ்வளவுதான் உணருவானோ? இந்த அதிசயங்களைப் படைக்கும் மனிதனுக்கு இத்தனை அறிவாற்றல் என்றால் அந்த அறிவை கொடுத்தவருடைய அறிவும் ஆற்றலும் எவ்வளவாய் இருக்கும். என்று யார் சிந்திக்கிறான்?

கோபுரம் கட்டுவது தவறல்ல. ஆனால் அதன் உள்நோக்கம் என்ன என்பது தான் முக்கியம். அன்று மக்கள் தேவனுக்கு அல்ல தமக்கு பேர் புகழ் உண்டாக்க தமக்கு ஒரு ஞாபக சின்னமாக இருக்கவே பாபேல் கோபுரத்தைக் கட்டினர். முடிவில் ஜனங்கள் சிதறிப்போயினர். ஆனால் இன்று மனிதன் தன்னை உயர்த்த உயர்த்த தேவன் பொறுமையோடு பார்த்துக்கொண்டிருப்பதனால் அவர் வலிமையற்று போய்விட்டார். என எண்ண வேண்டாம். கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார் அவ்வளவு தான். அவர் கோபம் பற்றியெரியும்போது அதை யார் தாங்கக்கூடும்? ஆகவே தேவபிள்ளையே நாம் எதைச் செய்தாலும் அதனை தேவ நாமத்திற்கு மாத்திரமே மகிமை உண்டாகச் செய்வோமாக.

ஜெபம் : பிதாவே. நீரே அதிசயமான தேவன். எனது ஒவ்வொரு அடியிலும் உம் நாமம் மகிமைப்படவேண்டும். வேறு நினைவுகள் எனக்கு வேண்டாம் ஜயா. ஆமென்.

பர்த்தலோமேயு சீகன்பால்

இந்திய புரோட்டஸ்டான்ட் திருச்சபையின் முதல் மிஷனரி:

இந்தியாவிற்கு வந்த சீர்திருத்த திருச்சபையின் (புரோட்டஸ்டான்ட்) முதல் மிஷனரி பர்த்தலோமேயு சீகன்பால்க்கின் வாழ்க்கையும் அவ‌ரது அருட்பணியும் பல இந்தியகிறிஸ்தவர்களின் வாழ்வில் பெரும் தாகத்தை ஏற்படுத்தி மிஷனரிப் பணியில் ஆழ்ந்தஅர்ப்பணத்தையும் விரிவான ஈடுபாட்டையும் ஏற்படுத்தியுள்ளது. மிஷனரி அருட்பணியில்அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு, இந்திய பக்தியின் சக்தியைக் குறித்து அவருக்கிருந்தநுண்ணறிவு, இந்திய கலாச்சாரத்தைப் பற்றி நுட்பமாக அறிந்து, கனிவாய் செயல்பட்ட விதம்,மிஷனரி அருட்பணி வெற்றி பெற அவர் கையாண்ட செயல்முறைகள், எல்லாவற்றிற்கும்மேலாக இந்தியா டென்மார்க் குடியமைப்பு ஆளுநராலும் கோப்பின்ஹாகனிலிருந்து மிஷனரிசெயலரால் வந்த எதிர்ப்புகளையும், துன்பங்களையும் அவர் அஞ்சா நெஞ்சுடன் மனந்தளராமல்சந்தித்த விதம் போன்றவை அவரது அரும்பெரும் குணாதிசயங்களில் சில. மேற்கூறிய அவரதுவாழ்க்கையின் மற்றும் அவராற்றிய மிஷனரிப் பணியின் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து நமதுமிஷனரி பணிக்கேற்ப மிக முக்கிய பாடங்ளை அறியலாம்.


பிறப்பும் இளமைப் பருவமும்:

சீகன்பால்க் ஜெர்மனியிலுள்ள பால்நிட்ஸில் 1682- ஆண்து ஜூன் 10-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஒரு பணக்கார தானிய வியாபாரி. அவருக்கு அநேக வீடுகளும், வேலைக்காரர்களும், வயல்வெளிகளும் இருந்தன. இருப்பினும் சீகன்பால்க்கின் பெற்றோருக்கு உடல்நலம் சரி இல்லாமலிருந்தது. அவர்களது பராமரிப்பில் வளர்ந்த குழந்தைகள் அனைவரும் பெலவீனமாகவும் நோய்வாய்ப்பட வாய்ப்புகளுடனும் காணப்பட்டனர். சீகன்பால்க் இதற்கு விதி விலக்கல்ல. (இந்த பெலவீனமான ஊனை தாங்கியவர் கடினமான இந்திய மண்ணில் உழைத்தார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறதல்லவா?). சீகன்பால்க் சரீரத்தில் பெலவீனராயிருந்தும் உயர்ந்த மனத்திறனையும் ஆழ்ந்த ஞானத்தையும் பெற்றிருந்தார்.


சீகன்பாலிற்கு பக்தி நிறைந்த தாயார் இருந்தார்கள். அவர்கள் மரணப்படுக்கையில் கூறின வார்த்தைகள் இவைகளே: "என் அருமை குழந்தைகளே! திருமறையை ஆராய்ந்து பாருங்கள், அவற்றின் ஒவ்வொரு பக்கங்களையும் என் கண்ணீரால் நனைத்திருக்கின்ற படியால் நீங்கள் அதில் பொக்கிஷத்தைக் காண்பீர்கள்." சீகன்பால்க் அவ்வார்த்தைகளை மறவாது திருமறையைக் கருத்தாய் கற்று வந்தார். சீகன்பால்க்கின் தாயார் இறந்த இரண்டு வருடத்தில் அவரது தகப்பனாரும் இறந்துவிட்டார். இன்னும் ஒரு வருடத்தில் அவரது சகோதரிகளில் ஒருவரும் மரித்துப்போனார்கள். தமது குடும்பத்தில் தொடர்ந்து நிகழ்ந்த இந்த துக்க சாகரம் அவரது மனதையும் தொடர்ந்து பாதித்தது. விரைவில் திறமையையும் இறை இயலையும் கற்றுக்கொள்ள கல்லூரிச் சேர்ந்தார்.
Related Posts Plugin for WordPress, Blogger...