கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 19 September 2012

மனநோக்கு

..வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி நமக்கு பேர் உண்டாக்கப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்…(ஆதியாகமம் 11 : 4 )

உலகின் அதி உயர்ந்த கட்டிடமாக, கனடாவின் ரொறொன்ரோ நகரில் 1976ம் ஆண்டு ஜீன் மாதம் 26ம் திகதி கோபுரம் ஒன்று மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டுää 1995ல் அமெரிக்க வல்லுனர்களினால் இன்றைய உலகின் மிகச் சிறந்த அதிசயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் உயரம் 447மீற்றர் அல்லது 1465 அடி. மக்கள் சென்றடயக்கூடிய அதி உயரத்திலிருந்து ஏறத்தாழ 160 கிலோமீற்றர் தொலைதுரத்திற்க்கு பூமியின் விஸ்தாரத்தைப் பார்க்கலாம். மக்கள் போகக்கூடிய அதிஉயரமான இடத்திற்க்கு ஏறி கால் வைக்கும் போது ஒரு வாசகம் எழுதப்பட்டுள்ளது உங்கள் தலைக்கு மேல் ஆகாயம் மாத்திரமே அதாவது அந்த இடத்தில் நிற்கும் போது முழு பூமியும் அதன் சகலமும் நமது கால்களுக்கு கீழே என்றுதானே அர்த்தப்படும் இல்லையா? இன்று இந்தக் கோபுரத்தின் 50வீத உயரத்தையும் தாண்டி அதி அதி உயரமான கோபுரம் ஒன்று டூபாய் தேசத்திலே கட்டப்படுகிது. என்ற செய்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பறவையைக்கண்டு விமானம் படைத்த மீன்களைக் கண்டு கப்பலைப்படைத்து எதிரோலி கேட்டு வானோலி படைத்து என்று மனிதன் படைத்த சாதனைகளையெல்லாம் நாம் அறிவோம். ஆனால் மனிதன் எதனைக் கண்டு அதிசயங்களைப் படைக்கிறான்? இயற்கையைப் பார்த்து அவன் படைத்துள்ள படைப்புக்களே அவன் வாழ்விற்க்கு மிக உதவியாயுள்ளன. ஆனால் தன்னுடைய அறிவினால் ஆற்றலினால் படைத்துள்ள இன்றய நவீனங்கள் மனிதனுக்கு எதனைத் தேடிக்கொடுக்கிறது? அங்கேயும் தேவன் அருளிய அறிவுதான் பங்கெடுத்துள்ளது என்பதை அவன் எவ்வளவுதான் உணருவானோ? இந்த அதிசயங்களைப் படைக்கும் மனிதனுக்கு இத்தனை அறிவாற்றல் என்றால் அந்த அறிவை கொடுத்தவருடைய அறிவும் ஆற்றலும் எவ்வளவாய் இருக்கும். என்று யார் சிந்திக்கிறான்?

கோபுரம் கட்டுவது தவறல்ல. ஆனால் அதன் உள்நோக்கம் என்ன என்பது தான் முக்கியம். அன்று மக்கள் தேவனுக்கு அல்ல தமக்கு பேர் புகழ் உண்டாக்க தமக்கு ஒரு ஞாபக சின்னமாக இருக்கவே பாபேல் கோபுரத்தைக் கட்டினர். முடிவில் ஜனங்கள் சிதறிப்போயினர். ஆனால் இன்று மனிதன் தன்னை உயர்த்த உயர்த்த தேவன் பொறுமையோடு பார்த்துக்கொண்டிருப்பதனால் அவர் வலிமையற்று போய்விட்டார். என எண்ண வேண்டாம். கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார் அவ்வளவு தான். அவர் கோபம் பற்றியெரியும்போது அதை யார் தாங்கக்கூடும்? ஆகவே தேவபிள்ளையே நாம் எதைச் செய்தாலும் அதனை தேவ நாமத்திற்கு மாத்திரமே மகிமை உண்டாகச் செய்வோமாக.

ஜெபம் : பிதாவே. நீரே அதிசயமான தேவன். எனது ஒவ்வொரு அடியிலும் உம் நாமம் மகிமைப்படவேண்டும். வேறு நினைவுகள் எனக்கு வேண்டாம் ஜயா. ஆமென்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...