கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday, 19 September 2012

உற்சாகமாய்க் கொடுக்கிறவரிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்


ஒய்வுநாள் பாடசாலை ஒன்றில் அதன் ஆசிரியர் பிள்ளைகளிடம் ஒரு கேள்வி கேட்டார். உங்களிடம் ஒரு கோடி ஓரு ரூபாய் இருந்தால் அதை இயேசுவிற்;கு கொடுப்பீர்களா? எல்லோரும் ஆம் என்று சத்தம் இட்டார்கள்.

ஜந்நூறு ரூபாய் இருந்தால் அதன் ஒரு பகுதியை கொடுப்பீர்களா?.. “ஆம் ரீச்சர்”
ஜம்பது ரூபாய் இருந்தால் அதன் ஒரு பகுதியை கொடுப்பீர்களா?.. “ஆம் ரீச்சர் கொடுப்போம்”
ஒரு ரூபாய் இருந்தால் அதன் ஒரு பகுதியை கொடுப்பீர்களா?.. “எவருமே எதுவுமே சொல்லவில்லை”. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

அப்போது கடைசி வரியில் இருந்த ரஞ்சன் மாத்திரம் எழுந்து நின்று “ஆம்” என்று கூறினான். ஆனால் அவனிடம் ஒரு ரூபாய் இருக்கவில்லை நான் கொடுப்பேன் என்று கூறி முன்வந்த ரஞ்சன் கையில் இருபத்தைந்து சதமே இருந்தது. அவன் தன்னிடமிருந்ததை இயேசு சுவாமியின் ஊழியத்திற்க்காக கொடுக்க முன் வந்தான். 

மற்றவர்கள் எல்லோரும் கோடி ரூபாய் கொடுப்பேன் என்றார்கள். எனென்றால் அவர்களிடம் அது இருக்கவில்லை ஆனால் அவர்களில் அனேகர் தங்களிடம் இருக்கும் சிறு பணத்தை கொடுக்க முன்வரவில்லை…
நம்மிடம் ஒரு கோடி இருந்தால் அதை இயேசுவுக்கு கொடுப்போம் என்று சொல்வது இலகு ஆனால் எம்மிடம் உள்ள சிறுதொகை பணத்தை என்ன? செய்கின்றோம்.

ஆம் நாம் இயேசு சுவாமியை எவ்வளவாய் நேசிக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவே நாம் அவருக்கு காணிக்கை கொடுக்கிறோம். அல்லது அவருடைய நாமத்தில் இல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். ஆகவே நாம் கொடுப்பது வெறும் பணமாக மாத்திரம் இருக்க வேண்டியதில்லை

உற்சாகமாய் கொடுக்கிறவர்கள் என்று வேதம் சொல்லுகிறது அல்லவா? அவர்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பதனால் கொடுக்காமல் தேவன் மீதுள்ள அன்பின் நிமித்தமாக கொடுப்பவர்கள். இயேசு சுவாமிக்கென்று அவருடைய நாமத்தினாலே நீங்கள் கொடுப்பதுண்டா? ஆம் இயேசு நமக்காக தன்னேயே கொடுத்தாரல்லவா?.. முதலில் நாம் நம்மையே அவருக்குக் கொடுப்போம். பிறகு நம்முடையதையும் அவருக்கு கொடுப்போம் நம்மிடம் இருப்பதிலிருந்து காணிக்கை கொடுத்து இயேசுவின் நாமத்தின் நிமித்தம் ஊழியர்களுக்கு நம்மை செய்ய முயற்சிப்போமாக..



No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...