கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 5 September 2012

அந்தரங்க ஜெபம்

நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டிற்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். - (மத்தேயு 6:6).
.
ஒரு முறை பாலைவனப்பகுதியில் ஒரு சில கிறிஸ்தவ வியாபாரிகள் பிரயாணம் செய்தார்கள். அப்போது அவர்களை கண்ட வழியிலுள்ள கொள்ளையர்கள் கூட்டம் ஒன்று அவர்களிடம் இருககும் பெரிய தொகையை கொள்ளையடிக்க பின்தொடர்ந்தது. இரவு நேரமானதும் வியாபாரிகள் ஒரு கூடாரம் போட்டு அங்கு தங்கினர். இது தான் நல்ல சமயம் என அறிந்த கொள்ளையர் கூட்டம் அங்கு சென்றது. ஆனால் அவர்களுக்கு பெரிய அதிர்ச்சி! காரணம் அவர்களின் கூடாரத்தை சுற்றிலும் ஒரு கோட்டை போல இருந்ததே காரணம்! மிகவும் குழப்பமடைந்த கொள்ளையர்கள் 'நாளை பார்த்து கொள்வோம்' என திரும்பி சென்றனர். மறுநாளும் அதே நிகழ்ச்சிதான். அடுத்தநாள் வியாபாரிகளிடம் கொள்ளை கூட்ட தலைவன் சென்று விசாரித்தபோது, வியாபாரிகள் அதிசயித்து தேவனை மகிமைப்படுத்தினர். 'நாங்க்ள ஒவ்வொரு நாளும் இரவில் கைக்கோர்த்து ஜெபிப்பது வழக்கம். விட்டு வந்த எங்கள் குடும்பத்தினரை தேவன் பாதுகாக்கும்படியாகவும், எங்கள் பிரயாணத்திலும் தேவகரம் இருக்கும்படியாகவும் ஜெபிப்போம். அந்த ஜெபம் கோட்டை போல் எழும்பி எங்களை பாதுகாத்துள்ளது' என்றார். கொள்ளையர் தலைவன் ஜெபத்தை கேட்கும் இப்படிப்பட்ட தேவன் ஒருவர் இருக்கிறாரா என எண்ணி வியந்து, தேவனை ஏற்று கொண்டான்.
Related Posts Plugin for WordPress, Blogger...