கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 26 August 2012

கொடுங்கள்.. நிச்சயம் பெறுவீர்கள்

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.



இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.


உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.(மத்தேயு 5:42)
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள் (மத்தேயு 5:45)

முடிவு பரியந்தம்

முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு 24 : 13 ) 

நெதர்லாந்து தேசத்திலே வெல்வற் குகை ஒன்று காணப்படுகின்றது. குளிர்காலத்தில் வெளவால்கள் உட்சென்று தங்கி உயிர் தப்புவதற்க்காக சில துவாரங்கள் உண்டு. இரு பையன்கள் இந்த குகையை ஆராய்ச்சி செய்ய நினைத்து இந்த துவாரத்திற்குள்ளால் குகைக்குள் குதித்திருக்கிறார்கள். அவர்கள் கொண்டு சென்ற வெளிச்சம் கிழே விழுந்து அணைந்துவிட அந்த பயங்கரமான இருளுக்குள் நடந்து நடந்து இறுதியிலே செத்துப்போனார்கள். இதிலே முக்கிய விடயம் இவர்கள் இறந்து கிடந்த இடத்திற்கும் குகையின் ஒரு வாசலுக்கும் இன்னும் ஒருசில அடிகள் தூரமே இருந்தது.

எத்தனை பரிதாபம் ஒரு சில அடிகள் தூரமே அதற்குள் மரித்துப்போனார்கள். ஜேர்மனியிலே கிழக்கு மேற்கு பேர்லின் இரண்டாக பிரிக்கபட்டு மதில் எழுப்பப்பட்டதால் அநேக குடும்பங்கள் ஒரே இரவில் பிரிக்கப்பட்டன. அப்பிரிவை தாங்கமுடியாமல் கிழக்கு பக்கத்தில் நடந்த உபத்திரவத்தை பொறுக்கமுடியாமல் அந்த சுவரை தாண்டிப்போக எத்தனித்து பாய்ந்து செல்லும்போது சுட்டு விழ்த்தப்பட்டவர்கள் அநேகர். இவர்கள் விழ்ந்து செத்த இடத்திலே சிலுவைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிலே ஒரு சிலுவையிலே பொறிக்கப்பட்டிருந்த ஒரு வாலிபனின் இறந்து போன திகதிää அந்த தடைச்சுவர் இடிக்கப்படுவதற்க்கு ஓரிரு மாதங்களுக்கு சற்று முந்தியதாகவே தெரிந்தது. பொறித்திருந்தவன் இன்னும் ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்தால் அவன் தன் உறவினருடன் வாழ்ந்திருக்கலாம் அல்லவா.இவற்றை பார்க்கும்போது ஆண்டவரின் வார்த்தைகளே ஞாபகத்திற்க்கு வரும். ஆம்ää முடிபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். அந்த பையன்கள் உயிர் தப்ப இன்னும் கொஞ்சத்தூரம்தான் இருந்தது. இந்த வாலிபன் தன் குடும்பத்தோடு சுதந்திரமாக இணைந்து கொள்ள இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருந்தது. அதற்குள் அவர்கள் இறந்து விட்டார்கள். தேவ வார்த்தையானது நம்மையும் எல்லாவிதத்திலும் எச்சரித்திருக்கிறது. முடிகால நிகழ்வுகள் நாம் வஞ்சிக்கப்படக்கூடி சாத்தியங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. எனினும் நம்மிடம் பொறுமையில்லை. இறந்து விட்டால் அப்புறம் தருணமே கிடைக்காது. ஆகவேää இன்னும் கொஞ்சக் காலந்தான். எந்த வித கஷ்டமோ? உபத்திரவமோ? சற்று நீடியபொறுமையோடு காத்திருப்போமாக. கர்த்தர் தமது வார்த்தையின் படி செய்வார். நிலைத்திருக்க வேண்டியவர்கள் நாங்களே. அப்படியாக தேவனுக்குள் நிலைத்திருக்கும் போது தேவன் நம்மை தப்புவிப்பது உறுதி.


ஜெபம்: பிதாவே மரண ஆபத்து நேர்ந்தாலும் அடியேன் உமக்காக மாத்திரம் காத்திருக்க கிருபை தந்துää முடிவுவரை நீரே என்னை நடத்தியருளும். ஆமென். 

உனக்காக மரித்தார்.

ஆபிரகாம்லிங்கன் அமெரிக்க ஜக்கிய நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நீக்ரோக்களை அதிகமாக நேசித்து அவர்கள் மீதிருந்த அடிமைதனத்தின் நுகத்தை முறிப்பதற்க்கு பாடுபட்டார். அடிமை வியாபாரத்தை ஒழிக்கும்படி அவர் சட்டத்தையும் இயற்றினார். இதனால் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? ஒரு தீயவனின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். குண்டு பாய்ந்த அவர் உயிரற்ற சடலம் அவரின் சொந்த ஊரான எலினா என்னுமிடத்திற்;கு திறந்த வண்டி மூலம் கொண்டு வரப்பட்டது. ஆயிரம் ஆயிரமாம் மக்கள் தங்கள் தலைவனுக்கு கடைசி அஞ்சலி செலுத்தினார்கள். அப்பொழுது ஒரு நீக்ரோ மாது, ஆபிரகாம்லிங்கனின் இறுதிக் கிரிகைகளை காண அவ்விடத்திற்க்கு விரைந்து வந்தாள். ஆனால் ஜனக்கூட்டமோ மிக அதிகமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவள் தன் மகனைக் கையினால் பிடித்து ஜனக்கூட்டத்திற்க்கு மேலாக உயர்த்தி “ மகனே பார் நன்றாக பார் அவர் உனக்காக மரித்தார்” என்று கதறிக்கொண்டு.



“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்.
Related Posts Plugin for WordPress, Blogger...