கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 26 August 2012

முடிவு பரியந்தம்

முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு 24 : 13 ) 

நெதர்லாந்து தேசத்திலே வெல்வற் குகை ஒன்று காணப்படுகின்றது. குளிர்காலத்தில் வெளவால்கள் உட்சென்று தங்கி உயிர் தப்புவதற்க்காக சில துவாரங்கள் உண்டு. இரு பையன்கள் இந்த குகையை ஆராய்ச்சி செய்ய நினைத்து இந்த துவாரத்திற்குள்ளால் குகைக்குள் குதித்திருக்கிறார்கள். அவர்கள் கொண்டு சென்ற வெளிச்சம் கிழே விழுந்து அணைந்துவிட அந்த பயங்கரமான இருளுக்குள் நடந்து நடந்து இறுதியிலே செத்துப்போனார்கள். இதிலே முக்கிய விடயம் இவர்கள் இறந்து கிடந்த இடத்திற்கும் குகையின் ஒரு வாசலுக்கும் இன்னும் ஒருசில அடிகள் தூரமே இருந்தது.

எத்தனை பரிதாபம் ஒரு சில அடிகள் தூரமே அதற்குள் மரித்துப்போனார்கள். ஜேர்மனியிலே கிழக்கு மேற்கு பேர்லின் இரண்டாக பிரிக்கபட்டு மதில் எழுப்பப்பட்டதால் அநேக குடும்பங்கள் ஒரே இரவில் பிரிக்கப்பட்டன. அப்பிரிவை தாங்கமுடியாமல் கிழக்கு பக்கத்தில் நடந்த உபத்திரவத்தை பொறுக்கமுடியாமல் அந்த சுவரை தாண்டிப்போக எத்தனித்து பாய்ந்து செல்லும்போது சுட்டு விழ்த்தப்பட்டவர்கள் அநேகர். இவர்கள் விழ்ந்து செத்த இடத்திலே சிலுவைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிலே ஒரு சிலுவையிலே பொறிக்கப்பட்டிருந்த ஒரு வாலிபனின் இறந்து போன திகதிää அந்த தடைச்சுவர் இடிக்கப்படுவதற்க்கு ஓரிரு மாதங்களுக்கு சற்று முந்தியதாகவே தெரிந்தது. பொறித்திருந்தவன் இன்னும் ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்தால் அவன் தன் உறவினருடன் வாழ்ந்திருக்கலாம் அல்லவா.இவற்றை பார்க்கும்போது ஆண்டவரின் வார்த்தைகளே ஞாபகத்திற்க்கு வரும். ஆம்ää முடிபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். அந்த பையன்கள் உயிர் தப்ப இன்னும் கொஞ்சத்தூரம்தான் இருந்தது. இந்த வாலிபன் தன் குடும்பத்தோடு சுதந்திரமாக இணைந்து கொள்ள இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருந்தது. அதற்குள் அவர்கள் இறந்து விட்டார்கள். தேவ வார்த்தையானது நம்மையும் எல்லாவிதத்திலும் எச்சரித்திருக்கிறது. முடிகால நிகழ்வுகள் நாம் வஞ்சிக்கப்படக்கூடி சாத்தியங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. எனினும் நம்மிடம் பொறுமையில்லை. இறந்து விட்டால் அப்புறம் தருணமே கிடைக்காது. ஆகவேää இன்னும் கொஞ்சக் காலந்தான். எந்த வித கஷ்டமோ? உபத்திரவமோ? சற்று நீடியபொறுமையோடு காத்திருப்போமாக. கர்த்தர் தமது வார்த்தையின் படி செய்வார். நிலைத்திருக்க வேண்டியவர்கள் நாங்களே. அப்படியாக தேவனுக்குள் நிலைத்திருக்கும் போது தேவன் நம்மை தப்புவிப்பது உறுதி.


ஜெபம்: பிதாவே மரண ஆபத்து நேர்ந்தாலும் அடியேன் உமக்காக மாத்திரம் காத்திருக்க கிருபை தந்துää முடிவுவரை நீரே என்னை நடத்தியருளும். ஆமென். 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...