கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 16 September 2012

கடவுள் இருக்கின்றாரா?

ஒருநாள் ஒரு மனிதன் தன் தலைமுடியை வெட்டுவதற்க்காகவும் தன் தாடியை சிரைப்பதற்க்காகவும் தன் வீட்டிற்க்கு அருகில் உள்ள பார்பர் சலுனுக்குச்சென்றார். அந்த பார்பர் வாடிக்கையாளருக்கு முடிவெட்டிக்கொண்டிருக்கும் போது இருவரும் பல தரப்பட்ட காரியங்களைக் குறித்து உரையாடத் தொடங்கினார்கள்.திடிர்ரென அவர்கள் கடவுளைக் குறித்து உரையாடத் தொடங்கினார்கள்.

பார்பர் கூறினான். கடவுள் இருக்கிறார் என்பதை நான் நம்புவதில்லை. ஏனனில் கடவுள் ஒருவர் இருந்தால் இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு வேதனையும் துன்பமும் கொடுமையும் காணப்பட வேண்டும்? எவ்வளவு பேர் பசி பட்டினி வியாதினால் கஷ்ப்படுகிறதை பாக்கிறோமை? கடவுள் என ஒருவர் இருந்தால் இவைகளை எல்லாம் அவர் ஏன் அனுமதிக்கவேண்டும். என்று கேட்டான்.

அதற்கு அந்த வாடிக்கையாளர். பதிலேதும் கூறவில்லை அவர் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை வாடிக்கையாளர் தான் வந்த வேலை முடிந்ததும் சலூனை விட்டு வெளியேறினார். அவர் அந்த பாதை வெளியே வீதியை கடக்கும் போது பாதை ஒரத்தில் நீண்டதாடியும் பல மாதங்களாக வெட்டப்படாமல் நீண்டு வளர்ந்த அழுக்கான தலை முடியம் கொண்ட ஒரு வயதான மனிதனைக் கண்டவுடன் அவர் மீண்டும் சலுனுக்குள் ஒடிச்சென்று பார்பரை நோக்கி உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த உலகில் பார்பர் என்ற ஒருவரே இல்லவே இல்லை அப்படிப்பட்ட ஒருவர் இருந்தால் ஏன் நீண்ட தாடியும் வெட்டப்படாத அழுக்கான தலைமுடியும் பலர் தெருவோரங்களில் காணப்படவேண்டும். எனப் பதில் கேட்டார்.


அதற்கு பார்பர் அவர்கள் அவர்கள் என்னிடம் வரா விட்டால் அதற்கு நான் காரணமா? என வாய்விட்டு சொன்னான்.

உடனே வாடிக்கையாளர் ; இதே போல்த்தான் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்பது பலருக்கு தெரிவதில்லை ஆனால் மனிதர்களோ தங்கள் பிரச்சனைகளையும் மாற்றக்கூடி அந்த மெய்யான ஆண்டவரிடம் வருவதே இல்லை. இதனால்தான் இந்த உலகில் இவ்வளவு வேதனையும் துன்பமும் பெருகியுள்ளது. எனவே வெறும் பிரச்சனைகளையும் துன்பங்களையும் கண்டு கடவுள் இல்லை என்று சொல்லாதே ; எனக் கூறிவிட்டு அந்த சலுனை விட்டு வெளியேறினார். வாடிக்கையாளர்.

வருத்தப்பட்டு பாரம் சுக்கின்றவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்றார் இயேசு இது நம்மில் அனேகம் பேருக்கு தெரிவதில்லை ஆனபடியினால் தான் நாம் துன்பத்தோடும் பிரச்சனைகளோடும் நம் வாழ் நாட்க்களை கடத்துகிறோம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...