கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 30 September 2015

வெட்கபடாத கடவுள்

...........ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனெப்படுவதற்கு வெட்கப்படுகிறதில்லை - ( ஏபிரெயர் 11:16 )

ஆயத்தங்கள், எதிர்பார்ப்புக்கள் நமக்குரியதை நமக்கே சொந்தமாக்கி கொள்ளதல் இவற்றில் என்ன தவறு உலக வாழ்விலே இவை எல்லாம் சகஜம் கிறிஸ்துவின் பிள்ளை நானும் இப்படித்தான் வாழ்வேனா?

ஆபிரகாம் தான் போகும் இடம் இன்னதென்று தெரியாமலே புறப்பட்டு போனார். தனக்கு வாக்குப்பண்ணப்பட்ட சுதந்திர பூமியிலேயே பரதேசியைப்போல அதாவது அந்த இடம் தனக்குரியதல்ல தனக்குரிய வதிவிடம் வேறு எங்கோ இருக்கிறது என்பது போல வாழ்ந்தார். சொந்த நிலத்திலே உறுதியான ஒரு உறுதியான வீடு கட்டாமல் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் கூடார வாசியாக வாழ்ந்தார். என்பதில் இது மேலும் தெளிவாகிறது. ஆபிரகாமின் மனைவியும் சரிரம் தெத்தவளாயிருந்தும் பிள்ளை பெற்றாள். ஆபிரகாம் பெற்றெடுத்தது ஒரேயொரு மகன் ஆனால் அவருக்குள் பெரிய ஜனப்பெருக்கமே இருந்தது. இவர்கள் எவரும் வாக்குப்பெற்றதைக் காணவுமில்லை. அதைக்குறித்து வாக்குவாதம் பண்ணவுமில்லை தாம் விட்டு வந்த ஊர் தேசத்தை நினைக்கவுமில்லை வாக்குப்பெற்ற தேசத்திலும் மனது வைக்கவுமில்லை, அதிலும் மேன்மையான பரம தேசத்தையே இவர்கள் நோக்காகக்கொண்டு வாழ்ந்தார்கள். ஏன்று சொல்லும்படிக்கு இவ்வுலகிலேயே சாட்சியாக வாழ்ந்தார்கள். அதனால் அவர்களுடைய தேவன் எனப்படுவதற்கு வெட்கப்படாமல், “ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன்” என்று தேவன் தமக்கு ஒரு பெயரையே சூட்டிவிட்டார்.

இவை எல்லாம் படிப்பதற்கோ பிரசங்கிப்பதற்கோ எழுதப்பட்டு நமது கரங்களில் கொடுக்கப்படவில்லை நாம் வாழுவதற்காகவே கொடுக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவை சேவித்தும் என் தேவைகள் என் எதிர்பார்ப்புகள், நியாயமாய் கிடைக்க வேண்டியவைகள் இன்னமும் நிறைவேறவில்லை என்று எத்தனை பேர் நமக்குள் புழுங்கி தவிக்கிறோம். இன்று நீதிமன்ற வாசலில் கிறிஸ்தவர்கள் நிற்பது ஏன்? திருச்சபைகள் நாளுக்கு நாள் உடைந்து போவது ஏன்? விசுவாசிகளுக்கிடையே பிளவுகள் ஏன்? இவை எதற்காவது நான் காரணமாக இருக்கிறேனா? அல்லது எனக்குள் உடைந்து போகின்றேனா? ஏன்று சற்று சிந்திப்போம். நமக்கு முன் நிறுத்தப்பட்டிருக்கிற விசுவாச கதாநாயர்கள் உலகம் பெருமைப்பட எதையும் சாதிக்கவில்லை, என்றாலும் இன்றும் விசுவாச விரர் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களை குறித்து வெட்கபடாத தேவன் இன்று இன்னாரின் தேவன் என்று நமது பெயர் சொல்ல வெட்கப்படுவாரா!... அல்லது பெருமைபடுவாரா? சிந்திப்போம் என்னைக் குறித்து தேவன் என்ன சொல்லுவார்.


ஜெபம் :-
பிதாவே உலகத்தை பரியப்படுத்தாமல் உம்மைப்போல வாழ உதவிசெய்யும். - ஆமென்.

   

Related Posts Plugin for WordPress, Blogger...