கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 23 September 2013

மிகுந்த அன்புடையவர்

'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை'. - (ஏசாயா 49:15).


இரண்டு மகன்களுக்கு ஒரு தகப்பன இருந்தான்.; அவன் மிகுந்த ஆஸ்தி உள்ளவனாக காணப்பட்டான். அவனிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தன.. இதனால் அவனுடைய வாழ்க்கையில் எந்த விதமான குறைவும் காணப்படவில்லை.. இருந்தும் அவனிடம் எராளமான சொத்துக்கள் காணப்பட்ட போதும் அவனுடைய இரண்டு பிள்ளைகளையும் கட்டுக்கோப்புடன் வளர்த்து வந்தான். இப்படியாக காலங்கள் உருண்டோடின… ஒரு நாள் அவனுடைய இரண்டாவது மகன் தகப்பனுடைய கட்டுப்பாடு பிடிக்காமல்…தந்தையே உம்முடைய கட்டுப்பாடு எனக்கு பிடிக்கவில்லை.. நான் சுதந்திரமாக வாழ விரும்புகின்றேன்.. எனவே சொத்தில் எனக்கு சேர வேண்டியதை பிரித்து தாருங்கள் எனக்கேட்டான்.. 

அந்த தகப்பனோ..! மகனின் அறியாமையை நினைத்து வருந்தியவராக.. மகன் கேட்டத்தை கொடுத்தார். அவனும் பெருமையுடன் சொத்தை வேண்டி கொண்டு துர தேசத்திற்கு சென்று துன்மார்க்கமாய் பணத்தை செலவழித்து மிகவும் கஷ்டமான நிலைக்கு செல்லல் ஆனால்.. ஒரு நாள் மனம் வருந்தியவனாக தகப்பனை நோக்கி புறப்பட்டு வந்தான்.. துரத்திலே தன் மகன் வருகிறதை கண்ட தகப்பன். அவனை கட்டி அணைத்து முத்தமிட்டு அவனை தன்னோடு சேர்த்துக்கொண்டார்.. மகனோ.. அப்பா நான் உங்கள் பிள்ளை இல்லை உங்கள் கட்டுப்பாட்டை மிறி பிழையான வழியிலே நடந்து விட்டேன்.. என்னை உங்கள் மகன் என்று சொல்லாதீர்கள்.. என்று மனம் நொந்து அழுதான்.

அந்த தகப்பனோ.. மனனே நீ எப்போதும் என் மகன் தான் காரணம் என் சாயலில் நீ இருக்கிறாய்.. உன்மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. எப்போதும் நீ என்னுடையவன் தான் .என்றார்

வேதம் சொல்கிறது; 'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல்; தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும்; நான் உன்னை மறப்பதில்லை' என்று. நம் தேவன் அந்த தாயிலும் மேலான அன்புள்ளவர். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை. 

அவர் நம் மேல் வைத்த அன்பு குறைவதில்லை. உலகத்தில் யார் நம்மை கைவிட்டாலும் நம்மை கைவிடாத தேவன் ஒருவர் உண்டு. நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று வாக்குதத்தம் செய்தவர் நம்மை ஒரு நாளும் திக்கற்றவர்களாய் விடவே மாட்டார். தாயினும் தந்தையினும் நம் மேல் அதிகமாய் அன்பு கூர்ந்து; நம்மை அணைத்து கொள்வார். நம் கண்ணீரை துடைப்பார். என் தகப்பன் எங்களைவிட்டு மரித்து போனபோதும்; என் தாய் என்னை விட்டு கடந்து போன போதிலும்; என் தேவன் என்னை கைவிடாமல்; என் வாஞ்சைகளை அறிந்து; என் தேவைகளை சந்தித்து; என்னை கரம் பிடித்து என்னை வழிநடத்தின தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். திக்கற்ற பிள்ளைகளுக்கு அவரே தகப்பன் என்ற வசனத்தின்படி அவரே தகப்பனாக தாயாக இருந்து வழிநடத்தி வருகிறார்.
.
ஒருவேளை நீங்கள் நினைக்கிறீர்களோ; எனக்கு யாரும் இல்லை; என் தகப்பனும் என் தாயும் என்னை கைவிட்டார்கள் என்று? 'என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்; கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்'(சங்கீதம் 27:10) என்று தாவீது சொல்வது போல நம் நம்பியிருக்கிற அனைவரும் நம்மை கைவிட்டாலும் நம் தேவன் நம்மை கைவிடமாட்டார். அவர் நம்மை சேர்த்து கொள்வார். மனம் தளர்ந்து போகாதிருங்கள். யாருமே எனக்கு இல்லையே என்ற அங்கலாய்ப்பு வேண்டாம். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவன் உங்களுக்கு தகப்பனாக இருந்து உங்களை தாங்குவார்; உங்களை தேற்றுவார்; உங்களை ஆற்றுவார்; உங்களை விசாரிப்பார். என்னை தேற்றி வழிநடத்தின தேவன் உங்களையும் தேற்றி; உங்கள் கண்ணீரையும் துடைப்பார். அவருடைய அன்பில் மூழ்கி; அவரை நாமும் நேசிப்போமா? அவர் நம்மை அன்புகூர்ந்தபடி நாமும் அவரில் அன்புகூருவோமா?

Related Posts Plugin for WordPress, Blogger...