கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 14 September 2012

அம்பெய்த படங்கள்

அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். - மத்தேயு 25:40. 
 ஒரு போதகர் சபையில் நடந்த ஒரு ரிட்ரீட் கூட்டத்தில் யார் யார் தங்களுக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களுடைய படத்தை வரைந்து, அதை அருகிலிருந்த சுவற்றில் உள்ள இலக்கின் மேல் மாட்டிவைத்து, அதன் மேல் அம்புகளை எய்யலாம் என்று கூறினார். ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடிக்காத நபரை மனதில் வைத்து, ஏறத்தாழ அவர்களுடைய உருவ படங்களை வரைந்து வைத்துக் கொண்டார்கள். (யாருக்கும் தெரியாது தங்களை தான் மற்றவர் வரைகிறார் என்று) அவர்களுடைய முறை வந்தபோது தங்கள் படங்களை அந்த இலக்கின் மேல் வைத்து அதன் மேல் அம்புகளை எய்தார்கள். இதை விளையாட்டுக்குத் தான் செய்தார்கள். நேரம் கடந்து விட்டபடியால் சிலருக்கு அம்பெய்ய நேரம் கிடைக்காதது வருத்தமாக இருந்தது. 

கடைசியில் போதகர் அவர்கள் அம்பெய்த படங்கள் இருந்த இலக்கை கிழித்து எடுத்தபோது, எல்லாவற்றிற்கும் பின்னால் இயேசுகிறிஸ்துவின் படம் இருந்தது. அவருடைய முகமெல்லாம் அம்பெய்து கிழிக்கப்பட்டிருந்தது. அப்போது போதகர் சொன்னார், ‘மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்’ என்று இயேசு கூறியதை ஞாபகப்படுத்தினார். அப்பொழுது எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் வந்தது. 

ஆம் பிரியமானவர்களே! நமது கிறிஸ்தவ சகோதரருக்கு விரோதமாக எத்தனைப் பேச்சுகள் பேசுகிறோம். ஒரே சபையை சேர்ந்தவர்களாயிருந்தாலும் எத்தனை பிரிவினை! எத்தனை கோப தாபங்கள்! எத்தனை பேர் மேல் மனக்கசப்பு! எத்தனை மன்னியாத தன்மைகள்!

தாழ்மை

உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். - (மத்தேயு 23:11-12)

18-ம் நூற்றாண்டில், அமரிக்காவில் உள்ள மேரிலேண்ட் (MaryLand) என்னும் நகரத்தில், அடித்த பலத்தக் காற்றில், ஒரு முக்கியமான பாதையில் ஒரு பெரிய மரம் வேரோடு பிடுங்கப்பட்டு, அந்தப் பாதையில் விழுந்தது. அதை ஒரு சில இராணுவ வீரர்கள் சேர்ந்து, மரத்தின் கிளைகளை வெட்டி, அந்தப் பெரிய மரத்தை அந்தப்பாதையிலிருந்து, எடுக்க மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய அதிகாரி, ஒரு குதிரையின் மேல், உட்கார்ந்துக் கொண்டு, அதைச் செய், இதைச் செய் என்று, அதிகாரம் பணணிக் கொண்டிருந்தாரே ஒழிய, ஒருச் சின்ன இலையைக்கூட எடுத்துப்போடவில்லை. 

அப்போது அவ்வழியே ஒரு வெள்ளை குதிரையின் மேல் வந்த ஒருவர், அந்த அதிகாரியைப் பார்த்து, 'நீர் ஏன் அந்த வீரர்களுக்கு உதவாமல், சத்தமாய் அப்படிச் செய் என்று அதிகாரம் செய்;துக் கொண்டிருக்கிறீர், போய் உதவலாமே' என்றுக் கேட்டதற்கு அந்த அதிகாரி, 'நான் ஒரு பெரிய அதிகாரி, இவர்களோடுப் போய் உதவிச் செய்வது என்னுடைய பதவிக்கும் மரியாதைக்கும் இழுக்கு' என்றுக் கூறினார். 

அப்போது அந்த வழிபோக்கர், தனது மேலாடையையும், தொப்பியையும் கழற்றிவிட்டு, மற்ற வீரர்களோடு சேர்ந்து, மிகவும், பிரயாசப்பட்டு, அ;நத மரத்தை அந்தப் பாதையிலிருந்து; எடுத்துப் போட்டார்கள். பிறகு அவ்வழிபோக்கர் அந்த அதிகாரியிடம், 'ஏதாவது தேவையென்றால் என்னைக் கூப்பிடுங்கள், நான் வந்து உதவுகிறேன்' என்றுக் கூறினார். அதற்கு அந்த அதிகாரி, 'நீர் யார்?' என்றுக் கேட்க, அவ்வழிபோக்கர், 'நான் தான் ஜார்ஜ் வாஷிங்டன்' (George Washington) என்றுக் கூறிவிட்டு, தனது குதிரையில் ஏறி விரைந்தார். அதைக் கேட்ட அந்த அதிகாரி ஆச்சரியமும் வெட்கமும் அடைந்தார். அந்த வழிபோக்கர் அமெரிக்க அதிபரும், அமெரிக்க ராணுவத்தின் தலைவருமாகிய ஜார்ஜ் வாஷிங்டன் ஆவார்.

கலங்கி தவிக்காதே

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். - நீதிமொழிகள். 22:19.

1958ஆம் ஆண்டு, ஜுன் மாதம் 10ம் தேதி, சார்ல்ஸ் பிளான்டின் என்பவர், நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒரு முனை தொடக்கி, மறுமுனை வரைக்கும், 1100 அடி நீளமுள்ள கயிற்றின் மேல் நடக்கப் போவதாக அறிவித்தார். அதைக் காண இரு கரைகளிலும் கூட்டம் அலை மோதியது. அவர் 38 அடி நீளமும், 40 பவுண்ட் எடையுள்ள கோலை பிடித்துக்கொண்டு சமநிலையாக நடந்து, ஒரு முனையிலிருந்து மறுமுனையை வந்தடைந்தார். அதுவரை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் அவர் வந்து சேர்ந்தவுடன் விண் அதிரும் கரகோஷத்தை எழுப்பியது.

அவர் தான் மீண்டும் நடக்கப் போவதாகவும், ஆனால் இந்த முறை ஒரு மனிதனை தன்னுடைய முதுகில் ஏற்றிக் கொண்டு நடக்கப் போவதாகவும் அறிவித்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம், நான் என் முதுகில் ஒரு மனிதனை ஏற்றி மறுகரையில்சேர்ப்பேன் என்று நம்புகிறீர்களா? என்றுக் கேட்டார். அதற்கு எல்லாரும் ஆம் என்று தலையை ஆட்டினார்கள். அப்படியானால் யாராவது வாருங்கள், நான் போய் சேர்க்கிறேன் என்று அழைத்தார். யாரும் முன்வரவில்லை. ஆகையால் தன் மேனேஜர் ஹென்றியிடம், நீங்கள் நம்புகிறீர்களா? என்றுக் கோட்டார். அதற்கு அவர் ‘ஆம் நிச்சயமாக நம்புகிறேன். நானே உங்கள் பின்னால் அமர்ந்து வருகிறேன்’ என்று கூறி அவர் மேல் அமர்ந்துக் கொண்டார். அவரை சுமந்தவாறு பிளான்டின் நடக்க ஆரம்பித்தார். திடீரென்று அந்தக் கயிறு ஆட ஆரம்பித்தது. உடனே பிளான்டின், ஹென்றியுடம், ‘நீர் எதையும் செய்ய வேண்டாம், என்னிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்தக் கொள்கிறேன்| என்று கூறி எச்சரித்தார். ஹென்றியும், எதுவும் செய்யாமல், பிளான்டினை முற்றிலும் சார்ந்து, இருவரும் பத்திரமாய் மறுகரை வந்து சேர்ந்தனர்.

“இது நானல்ல!” - சுயசரிதை

உருவம் தந்தவரின் கைபட்டால்  புழுதி கூட பூமாலையாகும்.

ஒர் ஆங்கில தம்பதியினர் ஒரு முறை பொருட்க்கள் வாங்க கடைக்கு சென்றார்கள். இவர்களுக்கு பழங்காலத்து அழகிய பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே மிக அழகாக வண்ணம் தீட்டப்பட்ட ஓர் அழகு தேனீர் குவளை (tea cup) ஒன்றை பார்த்தார்கள்.

“ இந்த குவளை மிகவும் அழகாக இருக்கிறதே. இதையே நாம் வாங்கி விடலாமே! இதைப்போன்ற ஓர் அழகான குவளையை நான் இது வரை பார்த்ததில்லை” என்றாள் மனைவி.

குவளையை கைகளில் வாங்கிய அந்த மனைவி அதன் அழகை ரசித்துக் கொண்டிருக்கையில் அந்த குவளை பேசத் துவங்கியது:“நான் எப்படி இவ்வளவு அழகான குவளையாக மாறினேன். தெரியுமா?” என்றது.

இப்படி அழகான குவளையாக ஆகும் முன் நான் ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு அழுக்கான சிவப்பு நிறம் கொண்ட ஒரு களிமண்ணாயிருந்தேன். என்னுடைய முதலாளியான குயவன் அழுக்கான என்னை எடுத்து என்னை தட்டி ஒரு உருண்டையாக மாற்றினார். அவர் என்னை தட்டி உருண்டையாக அழுத்தியபோது “ஜயா வேண்டாம்.. வேண்டாம்” என்று கதறி அழுதேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...