கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 14 September 2012

கலங்கி தவிக்காதே

உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். - நீதிமொழிகள். 22:19.

1958ஆம் ஆண்டு, ஜுன் மாதம் 10ம் தேதி, சார்ல்ஸ் பிளான்டின் என்பவர், நயாகரா நீர் வீழ்ச்சியின் ஒரு முனை தொடக்கி, மறுமுனை வரைக்கும், 1100 அடி நீளமுள்ள கயிற்றின் மேல் நடக்கப் போவதாக அறிவித்தார். அதைக் காண இரு கரைகளிலும் கூட்டம் அலை மோதியது. அவர் 38 அடி நீளமும், 40 பவுண்ட் எடையுள்ள கோலை பிடித்துக்கொண்டு சமநிலையாக நடந்து, ஒரு முனையிலிருந்து மறுமுனையை வந்தடைந்தார். அதுவரை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் அவர் வந்து சேர்ந்தவுடன் விண் அதிரும் கரகோஷத்தை எழுப்பியது.

அவர் தான் மீண்டும் நடக்கப் போவதாகவும், ஆனால் இந்த முறை ஒரு மனிதனை தன்னுடைய முதுகில் ஏற்றிக் கொண்டு நடக்கப் போவதாகவும் அறிவித்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம், நான் என் முதுகில் ஒரு மனிதனை ஏற்றி மறுகரையில்சேர்ப்பேன் என்று நம்புகிறீர்களா? என்றுக் கேட்டார். அதற்கு எல்லாரும் ஆம் என்று தலையை ஆட்டினார்கள். அப்படியானால் யாராவது வாருங்கள், நான் போய் சேர்க்கிறேன் என்று அழைத்தார். யாரும் முன்வரவில்லை. ஆகையால் தன் மேனேஜர் ஹென்றியிடம், நீங்கள் நம்புகிறீர்களா? என்றுக் கோட்டார். அதற்கு அவர் ‘ஆம் நிச்சயமாக நம்புகிறேன். நானே உங்கள் பின்னால் அமர்ந்து வருகிறேன்’ என்று கூறி அவர் மேல் அமர்ந்துக் கொண்டார். அவரை சுமந்தவாறு பிளான்டின் நடக்க ஆரம்பித்தார். திடீரென்று அந்தக் கயிறு ஆட ஆரம்பித்தது. உடனே பிளான்டின், ஹென்றியுடம், ‘நீர் எதையும் செய்ய வேண்டாம், என்னிடம் விட்டு விடுங்கள் நான் பார்த்தக் கொள்கிறேன்| என்று கூறி எச்சரித்தார். ஹென்றியும், எதுவும் செய்யாமல், பிளான்டினை முற்றிலும் சார்ந்து, இருவரும் பத்திரமாய் மறுகரை வந்து சேர்ந்தனர்.


அநேகர் நான் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொல்லியும் தங்களையும் தங்கள் பிரச்சனைகளையும் அவர் மேல் வைக்க விசுவாசிப்பதில்லை.

‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்ளூ நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்;அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது' - (மத்தேயு 11:28-30) என் இயேசு அழைக்கிறார். ஆனால் நம் சுமையை அவர் மேல் வைக்க நாம் அவரை விசுவாசிப்பதில்லை. நாமே சுமந்து துயரப்படுகிறோம். நமது துக்கங்களை துன்பங்களை, வியாதிகளை சுமந்த தேவன் நமக்குண்டு அவர் மேல் வைத்து விட்டால் அவர் நம்மை தாங்கி நடத்துவார்.

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு

கலங்கி தவிக்காதே

அவரே உன்னை ஆதரிப்பார்

அதிசயம் செய்வார்.



ஜெபம்:

எங்கள் அன்பின் பரம பிதாவே, எங்கள் பாரங்களை நாங்களே சுமந்து தவித்துப் போனோம் ஐயா. உம் மீது நாங்கள் இப்போதே வைக்கிறோம். திரும்ப நாங்கள் அதை எடுத்து சுமக்காதபடி, எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களை துக்கங்களை மாற்றும். அதிசயம் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...