கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 27 August 2012

முழுமையும் மன்னிக்கப்பட்டது

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ. எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ. அவர்கள் பாக்கியவான்கள். ( ரோமர் 4:7 )

மகன் செய்த குற்றத்திற்க்காக அவனை ஒரு மணிநேரம் அறையிலே தனிமையில் இருத்திவிட்டார். தந்தையார். ஒரு மணிநேரம் கழித்ததும் ஒரு கடதாசி தாளுடன் அறையைவிட்டு வெளியில் வந்த மகன் நேராக தகப்பனிடம் சென்றான். அப்பா நான் செய்த தவறுகளையெல்லாம் இத்தாளிலேயே எழுதியுள்ளேன். நான் இனிமேல் இப்படியாகச் செய்யமாட்டேன். என்று மனம் வருந்தி கேட்டுக்கொண்டான். அத்தாளை வாங்கிய தந்தையார் அதில் உள்ளவற்றையெல்லாம் ஒரு இறப்பரினால் அழித்துவிட்டு மகனே எல்லாவற்றையும் நான் மன்னித்து விட்டேன். இனி நல்லவனாய் பொறுப்புள்ளவனாய் நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன் என்றார்.

எழுதப்பட்ட தாள் எவ்விதம் வெறுமையாக்கப்பட்டதோ அதுபோலவே கறைபடிந்த எமது பாவ வாழ்வும் இயேசுவின் இரத்தத்தினால் ஒரு வெள்ளை தாளைப்போல சுத்திகரிக்கப்படுகிறது. தீயவர் திருடர், கொடியவர், கொலைஞர் இப்படியாக எத்தனையோ பேரின் வாழ்வு தேவனால் தொடப்பட்டு மாற்றங்கள் கண்டிருக்கிறது. செய்த குற்றத்திற்க்காக துக்குத்தண்டனைக்கு காத்திருந்த எத்தனையோ பேரின் வாழ்வும்கூடää சிறச்சாலையில் வைத்து தேவனால் தொடப்பட்டுள்ளது. துக்கு தண்டனையால் அவர்களின் உயிர் உடலைவிட்டு பிரிந்து போனாலும், நித்திய நித்தியமாய் தேவனோடுகூட வாழும் சிலாக்கியத்தை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நாம் விரும்பி பாடுகிற "ஒ தேவனுக்கு மகிமை என்னை துக்கியெடுத்தார்". என்ற பாடலை பாடியவரும் ஒரு துக்கு தண்டனை கைதியாகும். அவர் இரட்சிக்கப்பட்ட பின்னர், துக்கு தண்டனைக்காக அவரை அழைத்துச்சென்ற போதே அவர் இப்பாடலை இயற்றிப் பாடியதாகக் கூறப்படுகிறது. அவர் சந்தோஷத்தோடே அக்கரையில் நான் நின்று அவரை என்றென்றும் பாடுவேன் என்று பாடிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

தேவன் நமக்கு பாவத்திருந்து தரும் விடுதலை முற்றிலும் முழுமையானது. பாவத்தை வெறுத்து வெற்றியோடு வாழவே தேவன் எம்மை இரட்சித்திருக்கிறார். மாறாக பாவத்தைச் செய்து, செய்து மீண்டும் மீண்டும் மன்னிப்பு பெறவும் இரட்சிப்படையவுமல்ல என்பதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். தேவன் தரும் வெற்றியானது முற்றிலுமான முழுவதுமான வெற்றி. அதைப் பெற்றுக்கொண்டவர்கள் வாழ்வில் வீழ்ச்சிக்கு இடமேயில்லை. விழுந்தாலும் மீண்டும் வெற்றியோடு எழுந்து வெற்றி வாழ்வு வாழ்வார்கள். எனனில் அவர்கள் இப்பொழுது இயேசுவுக்குச் சொந்தமானவார்கள்.

எனவே அன்பான நண்பர்களே இறைவன் தருகின்ற இலவசமான இரட்சிப்பை பெற்று இறைவனுடைய அன்பில் வளர்ந்து அனேகருக்கு பிரியோஜனமாய் மாறுவோமாக..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...