கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 4 September 2012

துர நோக்குடன் ஓடு

கர்த்தரால் மீட்க்கப்படவர்கள் திரும்பி ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்கு வருவார்கள்.( ஏசாயா 35 : 10 )

எவ்வளவுதான் விசுவாசம் இருந்தாலும் சில வேளைகளில் மனம் சோர்ந்து விடுகிறது தேவகரத்தின் வல்லமையை பலவிதங்களில் ருதித்த ஒருவர் தான் இப்படி மனம் நொந்து பேசினார். இதே நிலையில் நம்மில் பல பேர் இந்த ஆண்டின் இறுதிக்குள் நுழைந்திருக்கலாம் இது தவறு என்று சொல்ல வில்லை சோர்வுகள் சோதனைகள் வரத்தான் செய்யும் ஆனால் நாம் அவற்றில் முழ்கி அழிந்து போய்விடக்கூடாது. நமது சந்தோஷம் கெட்டுப்போக குறிப்பிட்ட பிரச்சனையிலும் பார்க்க நாம் அதை கண்ணோக்கும் விதமேதான் முக்கிய காரணம்.

ஒரு வனாந்தரப்பாதையில் தன் இராணுவத்தை வழிநடத்திக்கொண்டு சென்ற ஒரு சீன இளவரசனின் பழைய கதையுண்டு வழியில் எல்லோரும் தாகத்தால் களைத்துவிட ஒரு சிப்பாயோ மயங்கியே விட்டான். இளவரசன் நாற்புறமும் சிப்பாய்களை தண்ணீர்தேடி அனுப்பினான். எல்லோரும் மேலும் களைத்து திரும்பினார்கள். மலர்ந்த முகத்தடன் திரும்பிய இளவரசன் ² தண்ணீரை காணவில்லை சிதறிக்கிடந்த சில் முந்திரிப்பழங்களைக் கண்டேன். இத் திசையில் போனால் முந்திரிப்பழங்கள் தாகத்தையும் தீர்க்கும் பசியையும் போக்கும் ² என்று சொன்னதுதான் தாமதம் எல்லோரும் களைப்பையும் மறந்து வேகமாக கிளம்பினார்கள். வெகுதுரம் சென்று விட்டனர். ஒன்றையும் காணவில்லை சற்றுத்துரம்தான் என்று இளவரசன் முன்னே பாய்ந்து சென்றான். இறுதியில் திராட்சை மரங்கள் தெரிந்தன. புசித்துப்பெலனடைந்தாகள்.
இளவரசன் பேசினான்: நண்பர்களே உண்மையிலேயே நான் திராட்சைப்பழங்களை காணவில்லை. ஆனால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த துரநோக்கோடு களைப்பையும் மறந்து முன்நோக்கி ஒடியதால் இவ்விடத்தை கண்டோம். இல்லையானால் தாகத்தால் அனைவருமே செத்து மடிந்திருப்போம். அல்லவா. நான் சொன்னது பொய்தான் மன்னித்து விடுங்கள் என்றானாம்.

ஆம் நண்பர்களே! நாம் சென்று கொண்டிருப்பதும் ஒரு வனாந்தரப்பயணம் போன்றதுதான். ஆனால் நமக்கு நம்பிக்கை நிச்சயமாய் கொடுக்கப்பட்டாயிற்று. ஆனந்த களிப்பான பாடல் கண்ணீர் துடைக்கப்பட்ட சஞ்சலமும் தவிப்பும் அற்ற நித்திய வாழ்வு. இந்த நம்பிக்கையோடே நாம் எவ்வளவு துரமும் ஒடலாமே. இவ்வுலகபாடுகளானாலும் அதன் வழியிலும் ஒருவர் நடந்து வெற்றி பெற்றிருக்கிறார். எனவே துணிந்து முன்னேறுவோம். கிழானவைகளல்ல மேலானவைகளை நோக்கி நம் பார்வையை செலுத்துவோம். இதுவரை நடத்தியவர் இன்னமும் நடத்திச்செல்வார்.

ஜெபம் : இதுவரை நடத்திய நல்ல தகப்பனே இந்த ஆண்டு முற்று முழுதாக நீர் எம்மை நடத்தியிருக்கிறீர். உமக்கு நன்றி அன்பின் தகப்பனே வனாந்தரப்பாதையானாலும் தீட்டற்றவனாக அதிலே நடந்து நீர் வைத்திருக்கம் நித்திய மகிழ்சியை நோக்கி ஒட பெலன் தாரும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...