கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Saturday, 25 August 2012

ஜான் என்ற ஒரு சிறுவனின் அனுபவம்


ஜான் எவருக்கும் கட்டுப்படாத ஒரு சிறுவன் தன் தாய்க்கும் கிழ்ப்படியாமல் தன் விருப்பம் போல திரிந்தான். அவனது தாயோ அவளுடைய எல்லா பிள்ளைகளும் இரட்சிக்கப்படவேண்டும். இயேசுவின் பிள்ளைகள் ஆகவேண்டும் என்று இடைவிடாமல் ஜெபித்து வந்தாள். இது அந்தத் தாய் தன் விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்ததை ஆதாரமாக கொண்டது என்று கூறினாள். தேவன் இரட்சிப்பு அவளுக்கு மட்டுமல்ல அவளுடைய வீட்டார் அனைவருக்கும் உண்டு என்று வாக்களித்தார். அந்த தாய் மரித்து சுமார் ஜந்து வருடங்களின் கடந்த பின் ஒரு ஜெபக்கூட்டத்தில் ஜான் எழுந்து நின்று என் அம்மாவின் இடைவிடாத ஜெபத்தின் பலனாக இன்று நான் இயேசுவின் பிள்ளையாக மாறிவிட்டேன். அவரது
இரட்சிப்பும் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்திருக்கிறது.என்று சாட்சி கூறினான்.

நாமும் உலக மாந்தர் அனைவரும் இரட்சிக்கப்பட இடைவிடாது ஜெபிப்போம். நம் ஜெபத்தின் பயனாக ஒரு ஆத்துமாவேனும் ஆண்டவரை அறிந்து கொண்டால் இவ்வுலகில் நம்மை பிளைக்கச்செய்யும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும். 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...