கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Saturday 25 August 2012

தீமைக்கு நன்மை செய்யப்பழகுவோம்


ஒரு தேவஊழியன் தான் தங்கியிருந்த கிராம மக்கள் மத்தியிலே நன் மதிப்பை பெற்றிருந்தார். யாவரும் அவரை நேசித்தனர். எந்தவொரு சிறு விடயமானாலும் அவரை நாடிப் போவார்கள். இதைக் கண்டு பொறாமை கொண்டனர் சிலர். ஊழியருக்கு விரோதமாக திட்டம் போட்டனர். அது ஊழியருக்கு தெரியவந்தது. தங்களது திட்டம் தெரிந்து அவர் ஓடி ஒளிந்திடுவார் என்று எண்ணினர். ஆனால் அந்த ஊழியரோ அவர்களேயே தேடிப் போனார். அவர்கள் எதிர்பார்த்திராததால் ஆச்சரியத்தில் வாயடைத்துப்போயினர். ஊழியர் அவர்களுடன் அமர்ந்து, தான் கொண்டுவந்த அன்புப் பரிசுகளையெல்லாம் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து; உங்கள் நாலுபேருக்கும் ஒரு கம்பனியில் வேலைக்கு ஒழுங்கு செய்திருக்கிறேன். நாளைக்கே போய் வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். அவர்களோ வெட்கித் தலைகுனிந்தனர்.

அன்பான நண்பர்களே, நாம் தேவகரத்தில் இருக்கிறோம் என்ற உறுதி நமக்கு இருக்குமானால் நமக்கு எதிரே வருகிற எந்தத் தீங்குக்கும் நாம் பயப்படத்தேவையில்லை. மெய்யாகவே அவை நமக்குத் தீங்காகவே மாறாலாம். ஆனாலும் தேவன் நிர்ணயிக்காத எதுவும் நம்மை அணுகவே முடியாது. ஆகவே, கர்த்தருக்குள் வாழ்வது மெய்யானால் நாம் எதற்கும் பின்னடையத் தேவையில்லை.  நம்மை எதிர்கொள்ளும் தீமையை, நமது நல்நடத்தை பின்னடையச் செய்யவேண்டும். அங்கே ஆண்டவர் மகிமைப்படுவார்.                ஆமென்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...