கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Saturday 25 August 2012

இது கதையல்ல நிஜம் (ஓரு டம்ளர் பால் )

பின் தங்கிய கிராமமொன்றில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்த ஒரு சிறுவன் பாடசாலை முடிந்து வீடு வந்ததும் மாலை நேரங்களில் தன்னுடைய தாயார் செய்து கொடுக்கின்ற பலகாரங்களை வீடுவீடாகச் சென்று விற்பது வழக்கம். அதில் கிடைக்கும் சிறிய வரமானத்தைக் கொண்டு அவனால் தன் கல்வியை தொடரக் கூடியதாக இருந்தது.

இப்படியாக தனது வழக்கத்தின்படியே ஒருநான் வீடுவீடாகச் சென்று பலகாரம் விற்கப் புறப்பட்டான். எனினும் அன்று நெடுநேரமாகியும் அவனால் ஒன்றையும் விற்க முடியவில்லை. மிகவும் களைப்படைந்த அதே வேளை தாகத்தால் அவனது நாவறண்டு பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. ஆகவே அவன் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தன்னுடைய தாகத்திற்கு தண்ணீர் கேட்க நினைத்தவனாய் கதவைத் தட்ட ஆரம்பித்தான்.

கதவைத் திறந்துகொண்டு வீட்டின் உள்ளேயிருந்து வந்த ஒரு இளம்பெண் அவனை நோக்கி: “ தம்பி உனக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டாள். உடனே அவன் “எனக்கு தாகமாய் இருக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் தருவீர்களா” என மெல்லிய குரலில் கெஞ்சிக் கேட்டான்.

அவன் மிகவும் களைத்துப் போயிருப்பதைக் கண்ட அந்த இளம்பெண் உள்ளே சென்று ஒரு டம்ளர் நிறைய குடிப்பதற்கு பால் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். பசியோடு இருந்தவன். அந்தப் பால் டம்ளரை கையில் ஏந்தியவனாக: “ இதற்கு நான் எவ்வளவு தரவேண்டும்” எனக் கேட்டான்.

அவனது இக் கேள்வியினால் மெய் சிலிர்த்த அவள் “ சிறுவனே நீ எனக்கு ஒன்றும் தர வேண்டியதில்லை” என பாசத்தோடு கூறிளாள். அவனோ “ இல்லை யாரிடமும் இலவசமாக ஒன்றும் வாங்கக் கூடாது என என்னுடைய தாயார் எனக்கு கற்பித்திருக்கின்றார்கள். ஏனக்கூற அவளோ “ பரவாயில்லை இதை என்னுடைய அன்பளிப்பாக ஏற்றுக்கொள்” எனக் கூறினாள். அவனும் அதைப் புன்னகையுடன் ஏற்றக்கொண்டவனாக பாலைப்பருக ஆரம்பித்தான். அவன் பாலைப் பருகி முடித்ததும் “நன்றி!” என்ற வார்ததைகயைத் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவளுக்கு கூறிவிட்டு புறப்பட்டான்.

அன்று அந்த சிறுவனின் பசிக்கு பால் கொடுத்தது உதவிய அந்தப் பெண்ணுக்கு மறுபடியும் அந்தச் சிறுவனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. காலங்கள் உருண்டோடிட அந்தப் பெண் தன் வீட்டில் தனியாகவே வாழ்ந்து வந்தாள். வருடங்கள் பல கழிந்தது. இப்போது முதிர்வயதில் அவள் மிகவும் பலவினமானக இருந்தாள்.

ஒரு நாள் திடீரென மிகவும் சுகவீனமுற்ற அவள் கிராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு என்ன வியாதி என்பதை டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அதனால் அவள் நகரிலிருந்த ஒரு பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். அங்கு அவளது வியாதியை கண்டறிய டாக்டர் ஹவார்ட் என்பவரின் உதவி நாடப்பட்டது.

டாக்டர் ஹவார்ட தன்னிடம் அனுப்பப்பட்ட அந்த வயதான நோயாளியின் பெயரையும் அவளது ஊரையும் கேட்டபோது அவரது கண்கள் ஆச்சரியத்தினால் விரிய ஆரம்பித்தது. அவரது மனத்திரையில் கடந்த கால் நினைவுகள் ஒரு நிழற்படமாக ஓட ஆரம்பித்தது. ஆம் அவள் வேறு யாருமல்ல தான் ஒரு சிறுவனாய் இருந்த போது தன் பசிக்க பால் கொடுத்த தயாள சிந்தையுள்ள பெண்மணியே அவள் என்பதை அவர் அறிந்து கொண்டார். அந்தக் கணத்தில் தானே அவர் தான் யார் என்பதைக் காடிக்கொள்ள விரும்பாதவராக அவளது வியாதி என்ன என்பதை குறித்து ஆராய்ந்து மிகுந்த கரிசனையுடன் நேரமெடுத்து அவளுக்கு அவர் தகுந்த வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். அதுமட்டுமன்றி தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அவளை வந்து பாரத்துவிட்டுச் செல்வார். இப்படி அந்த டாக்டரின் சிகிச்சையினாலும் கடவுளின் கிருபையினாலும் சில மாதங்களிலேயே அவள் பூரண சுகமடைந்து தன் வீடு திரும்ப ஆயத்தமானாள்.அவள் வீடு திரும்புமுன் வைத்தியசாலைக்கு அவள் செலுத்தவேண்டிய பில் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. தான் தன் இறுதி நாட்களுக்காக சேர்தது வைத்திருந்த பணம் அதற்குப் போதுமானதாக இருக்குமோ அல்லது வசித்து வந்த தன்னுடைய சொந்த வீட்டையும் விற்க வேண்டிய நிலை ஏற்படுமோ என எண்ணியவளாக நடுக்கத்துடன் அதை வாங்கி அவள் பிரிக்க ஆரம்பித்தாள். அவளது கைகளில் கொடுக்கப்பட்ட அந்தப் பற்றுச்சுpட்டின் கடைசி வரிகளில் எழுதப்பட்டிருந்த வார்ததைகள் அவளது கவனத்தை ஈர்த்தது.

“ ஒரு டம்ளர் பாலுக்கு நன்றியாக முழுத்தொகையும் செலுத்தப்பட்டாயிற்று இப்படிக்கு அன்புடன் டாக்டர் ஹவார்ட்”

அவளது கண்களில் கண்ணீர் வழிந்தோடிட அவள் ஆண்டவரே மனிதர்களுக்கு காட்டிடும் தயவினால் நீர் உமது அளவற்ற அன்பை எமக்கு வெளிக்காட்டுவதற்காக நன்றி என தன் உள்ளத்த்தால் ஆண்டவருக்கு நன்றியைச் சொன்னாள்.“ ஒரு டம்ளர் பாலுக்கு நன்றியாக முழுத்தொகையும் செலுத்தப்பட்டாயிற்று இப்படிக்கு அன்புடன் டாக்டர் ஹவார்ட்”

வேதாகமத்திலே இப்படியாக ஒரு வசனம் காணப்படுகிறது.” உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு அநேக காலத்தின் பின்பு அதின் பலனைக்காண்பாய்” (பிரசங்கி 11:1). ஆம் நாம் பிரதிபலனை எதிர்பாராது மற்றவர்களுக்காகச் செய்யும் நன்மையானது நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நமக்கோ அல்லது நமது அன்புக்குரியவரகளுக்கோ திரும்பவும் கிடைக்கும். ஒரு வேளை அது திரும்பக் கிடைக்காது போனாலும் கூட இந்த வேதனை நிறைந்த உலகத்திற்கு நாம் ஒரு நன்மை செய்யக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைவோமாக. இதற்காகவே நாம் சிருஸ்டிக்கப்பட்டிருக்கின்றோம்.

‘ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஸ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாயிருக்கின்றோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார்.(எபெசியர் 2:10)

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...