கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Saturday 25 August 2012

மூன்று பதில்கள்



அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான். நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன் ( சங்கிதம் 91 : 15 )


ஓவ்வொரு நாளும் இரவு ஜெபத்தின்போது ராஜா வேண்டிக்கொண்ட ஒரு காரியம் ஆண்டவரே இம்முறை பிறந்த நாள் அன்று எனக்கு எப்படியாவது ஒரு சைக்கிள் பரிசாக கிடைக்கவேண்டும் என்பதுதான்.

ஆனால் ராஜாவின் பெற்றோரோ எழைகள் எனினும் அவனது அப்பா அம்முறை அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுக்க விரும்பினார். ஆனாலும் அவனது பிறந்த நாள் நெருங்கியபோது அவரிடத்தில் போதியளவு பணம் இருக்கவில்லை.

எனவே, ராஜா இயேசு சுவாமியை நம்ப மாட்டான் என கவலையுற்றாhர். இவ்வளவு நாட்க்களாக அவன் கடுமையாக ஜெபித்தான். ஆகவே சைக்கிள் இல்லாவிட்டால் ராஜா இனி இயேசுவை நேசிக்கமாட்டான் என நினைத்தார்.

பிறந்த நாள் அன்று அப்பா ராஜாவைப்பார்த்து ” என்னால் உனக்கு சைக்கிள் வாங்கித்தர முடியவில்லை, என்னிடம் போதியளவு பணம் இருக்கவில்லை. அதற்காக ஆண்டவர் மீது கோபப்படாதே” என்றார். துக்கத்தோடு ராஜா என்ன பதில் சொல்லியிருப்பான் தெரியுமா?

‘அப்பா ஆண்டவர் என் ஜெபத்திற்கு பதில் கொடுத்து விட்டார்.’ அப்பாவிற்கு ஆச்சரியமாய் இருந்தது ‘அப்படியா’ என்றார்.

‘ஆம் அப்பா அதாவது எப்போது எனக்கு சைக்கிள் அவசியப்படுகிறதோ? அப்பொழுது அதை அவர் தந்தருள்வார். என நினைக்கிறேன்.’ ஏன்றான். இதைக்கேட்டதும். ராஜாவின் அப்பாவிற்க்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவன் தேவனை அருமையாய் புரிந்து கொண்டதையிட்டு அவர் மகிழ்ச்சியடைந்நதார்.

ஆம் அன்று ராஜா அருமையான பாடத்தை கற்றுக்கொண்டான்.

ஆண்டவர் எப்பொழுதும் எம் ஜெபத்திற்க்கு ஆம் என்று மாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கமாட்டார். நாம் வேண்டிக்கொள்ளும் சில காரியங்கள் சில வேளை நமக்கு கூடாததாக இருக்கலாம். அவர் எல்லாவற்றையும் முன்னதாக அறிந்திருப்பதனால், நமக்கு தீங்கு விளைவிக்கும் காரியங்களை அவர் தரமாட்டார். அவர் எம்மை நேசிக்கிறார்.

இயேசு சுவாமி எமது ஜெபத்திற்க்கு முன்று விதமாக பதில் அளிப்பார். ஓன்று ஆம் என்று பதில் அளிப்பார். அடுத்து இல்லை என்றும் பதில் அளிப்பார். மூன்றாவதாக இப்போது இல்லை காத்திரு என்றும் பதில் அளிப்பார்.ராஜாவைப்போல ‘இல்லை’ அல்லது காத்திரு என்று பரில் கூறும் போதுங்கூட நாம் அவர் எம்மை நேசிக்கிறார் என்று நம்பவேண்டும்.

இயேசு சுவாமி அவர்களின் பிள்ளைகளின் ஜெபத்தை எப்பொழுதும் கேட்;கிறார்.

அப்படி ஜெபிக்கும்போது, நான் உத்தரவு கொடுப்பேன். அல்லது பதில் கொடுப்பேன் என்று வேதத்தில் அவர் உறுதி மொழியும் கூறியிருக்கிறார். நாம் கேட்கிற எல்லா காரியங்களையும் கேட்ட உடனேயே அவர் கொடுத்து விடமாட்டார். அது எமக்கு அவசியமாகதாக இருந்தால் மட்டுமே அவசியமான நேரத்தில் கொடுப்பார்.

ஆம் நண்பர்களே! இயேசு சுவாமி எங்களுடைய ஜெபத்திற்க்கு பதில் கொடுக்கிறவராக இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...